For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இது செம கேம்.. இதையும் விடாதீங்க.. வெறும் டாய்லெட் பேப்பர் ரோல் போதும்!

சென்னை: விளையாட்டுப் பிரியர்களுக்கு எது கிடைத்தாலும் எடுத்து விளையாடுவார்கள் போல.. அப்படி நமது கண்ணில் பட்ட இன்னொரு காமெடியான விளையாட்டு இது.

விளையாட முடியாமல் வீட்டில் முடங்கியிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு இப்போது கை கொடுப்பது சோசியல் மீடியாக்கள்தான். விளையாட்டு வீரர்கள் ரசிகர்களுக்கு பதில் சொல்கிறார்கள். சக வீரர்களுடன் வீடியோ காலில் பேசிக் கொள்கிறார்கள். வீட்டினருடன் பொழுதைக் கழிக்கிறார்கள்.

மறுபக்கம் விளையாட்டுப் பிரியர்கள் ஏதாவது செய்து தங்களை ஹேப்பியாக்கிக் கொள்கிறார்கள். பழைய உலககக் கோப்பை போட்டிகளை சில டிவிகள் ஒளிபரப்பு செய்தன. அதேபோல ஐபிஎல் போட்டிகளையும் ஒளிபரப்பு செய்கிறார்கள்.

இது வித்தியாச விளையாட்டு

இது வித்தியாச விளையாட்டு

இந்த நிலையில்தான் இந்த வீடியோ கண்ணில் பட்டது. இது ஒரு வீடு. இந்த வீட்டில் நடக்கும் ஒரு காமெடியான விளையாட்டுதான் இது. இது தடை தாண்டி ஓட்டப் பந்தயம். வீட்டுக்குள் எப்படி தடை தாண்டி ஓட்டம் என்று யோசனை வரலாம். ஆனால் எப்படி புத்திசாலித்தனமாக நடத்தியிருக்கிறார்கள் பாருங்க. அதுதான் விசேஷமே. இந்த போட்டியில் 2 பங்கேற்பாளர்கள்தான். அவர்களும் யார் தெரியுமா.. 2 பூனைக் குட்டிகள்தான்.

பேப்பர் கட்டுக்கள் போதும்

வீட்டின் கதவுக்கு நடுவே டாய்லெட் பேப்பர் ரோல்களை அடுக்கி வைத்துள்ளனர். அதிலும் அதைத் தாண்டி ஓடுகின்றன பூனைகள். இதுதான் விளையாட்டு. இதில் பல லெவல்கள் உள்ளன. ஒவ்வொரு லெவலுக்கும் டாய்லெட் பேப்பர் ரோல்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும்.. இதுதான் கேம். இந்த கேமுக்கு நடுவர் எல்லாம் கிடையாது. பூனைங்க பாட்டுக்கு தாண்டி ஓடிட்டே இருக்க வேண்டியதுதான்.

சூப்பர் பூனைகள்

சூப்பர் பூனைகள்

கிட்டத்தட்ட 6 லெவல் வரை போட்டி போகிறது. சும்மா சொல்லக் கூடாது. ஆறு லெவல்களையும் இந்த இரு பூனைகளும் அனாயசமாக கடந்து தாண்டி போய் விடுகின்றன. ஆக போட்டியில் இரு பூனைகளுக்கும் வெற்றிதான். அதாவது போட்டியாளர்கள் அனைவருமே போட்டியில் வென்று அசத்தி விட்டனர். போட்டி நிறைவடையப் போகும் சமயத்தில் வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெண்மணி வருகிறார். வந்து பார்த்து அடப் பாவிகளா என்று ஆச்சரியப்படுகிறார்.

இப்படியுமா விளையாடுவீங்க

இப்படியுமா விளையாடுவீங்க

என்ன செய்வது இப்படி எதையாவது செய்துதான் விளையாட்டுப் பிரியர்கள் மனசை ஆற்றிக் கொள்ளவேண்டியுள்ளது. ஆனால் பாருங்க. இது கூட ஜாலியாத்தான் இருக்கு. இந்த போட்டியைக் காண பெரும் கூட்டமெல்லாம் இல்லை. எனவே சோசியல் டிஸ்டன்சிங்கையும் கடைப்பிடிச்சாச்சு. ஒரு குட்டி விளையாட்டுப் போட்டியையும் நடத்தியாச்சு. பொழுதும் ஜாலியா ஓடிப் போயாச்சு.. அருமைதான்.

Story first published: Sunday, April 5, 2020, 15:06 [IST]
Other articles published on Apr 5, 2020
English summary
This is awesome indoor game and this is the favourite game of America now
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X