2வது முறையாகவா??.. செஸ் உலகமே வியந்த போட்டி.. உலகின் நம்.1 வீரர் கார்ல்சனை அலறவிட்ட பிரக்ஞானந்தா!

சென்னை: உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை 2வது முறையாக வீழ்த்தி அசத்தியுள்ளார் 16 வயதான பிரக்ஞானந்தா.

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் தொடரானது ஆன்லைன் வழியாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 16 வீரர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை காண்பித்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழகத்தை சேர்ந்த முன்னனி செஸ் வீரர் பிரக்ஞானந்தாவும் கலக்கி வருகிறார். இன்று உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை அவர் எதிர்கொண்டார். அவர்கள் இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவியது. எனவே போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் செஸ் போட்டி.. தமிழகம் தான் காரணமாக போகிறதா??.. வல்லுநர் கூறிய சுவாரஸ்ய தகவல்கள்!! ஒலிம்பிக்கில் செஸ் போட்டி.. தமிழகம் தான் காரணமாக போகிறதா??.. வல்லுநர் கூறிய சுவாரஸ்ய தகவல்கள்!!

இறுதியில் 40வது நகர்த்தலுக்கு பிறகு கார்ல்சன் செய்த சிறு தவறை கண்டுபிடித்த பிரக்ஞானந்தா, சரியாக பயன்படுத்திக்கொண்டார். இதனால் உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்தி பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றார். இதுபோன்று நடப்பது இரண்டாவது முறையாகும்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இணையம் வழியாக நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனைத் தோற்கடித்து பிரக்ஞானந்தா உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார். தற்போது மீண்டும் அதே சாதனையை படைத்துள்ளார். இதனால் அவருக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்தன. பிரக்ஞானந்தா தற்போது சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
TN Chess Player Praggnanandhaa beats world No. 1 player Magnus Carlsen for the 2nd time in 2022
Story first published: Saturday, May 21, 2022, 13:32 [IST]
Other articles published on May 21, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X