For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன கொடுமை சார் இது.. இன்று ஐ.நா. சர்வதேச விளையாட்டு தினமாம்.. இப்படி ஆகிப் போச்சே

சென்னை: உலகமே முடங்கிப் போயுள்ளது. விளையாட்டுத் துறை அப்படியே ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கிறது. இந்த லட்சணத்தில் இன்று சர்வதேச விளையாட்டு தினமாம். விளையாட்டுத்துறையினர் பெரும் வேதனையில் இதை கொண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Recommended Video

2011 World Cup final: Sachin reveals the secret of Dhoni's no.5 batting

உலகம் முழுவதும் கொரோனாவைரஸின் ஆட்டம்தான் வெறியாட்டமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்த முடியாமல் மருத்துவர்கள் திணறிக் கொண்டுள்ளனர். கொரோனாவின் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் முடங்கிப் போய் விட்டன.

இந்த நிலையில் இன்று ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விளையாட்டு தினத்தை கொண்டாடி வருகிறது. முழு விளையாட்டுத் துறையும் முடங்கிப் போயுள்ள நிலையில் வந்துள்ள இந்த விளையாட்டு தினம் யாரையும் சந்தோஷப்படுத்தவில்லை.

பழைய எனர்ஜியோட இந்த ஆண்டிலேயே மீண்டும் விளையாடுவோம்... விஜேந்தர் சிங் நம்பிக்கைபழைய எனர்ஜியோட இந்த ஆண்டிலேயே மீண்டும் விளையாடுவோம்... விஜேந்தர் சிங் நம்பிக்கை

மொத்தமா முடங்கிப் போச்சே

விளையாட்டுத்துறை முற்றிலும் முடங்கிப் போயுள்ள நிலையில் வந்துள்ள இந்த விளையாட்டு தினம் யாரையும் மகிழ்ச்சிப்படுத்தவில்லை. மாறாக வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தினத்தைக் கொண்டாட முடியாமல் விளையாட்டு வீரர்கள் ஏமாற்றத்தில் மூழ்கியுள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் தந்துள்ள கென்ய நாட்டு விளையாட்டுத்துறை அனைவரும் இந்த நாளில் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உறுதி எடுப்போம் என்று கூறியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் இல்லை

ஐபிஎல் போட்டிகள் இல்லை

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த மாதத்தில் ஐபிஎல் போட்டிகள் களை கட்டியிருக்கும். ஆனால் இந்த முறை அது நடக்காமல் போய் விட்டது. ஏப்ரல் 15ம் தேதி என்று சொல்லப்பட்டாலும் கூட அதற்கான வாய்ப்புகள் சுத்தமாக இல்லை என்பதே நிதர்சனம். எனவே கிரிக்கெட் வீரர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில்தான் ஐபிஎல் போட்டிகள் நடக்க வாய்ப்புகள் அதிகம்.

இது டென்னிஸ் சோகம்

இது டென்னிஸ் சோகம்

அதேபோல இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டிகள், பிரெஞ்சு ஓபன் ஆகியவை நடக்க முடியாமல் போய் விட்டது. அதேபோல அமெரிக்க ஓபன் போட்டியாவது நடக்குமா என்பதும் சந்தேகமே.. காரணம் அமெரிக்கா பெரும் பாதிப்பை சந்தித்து வருவதால். கொரோனாவிடம் சிக்கித் தவித்த விளையாட்டுப் போட்டிகளில் டென்னிஸும் ஒன்று.

பரிதாப கால்பந்து

பரிதாப கால்பந்து

அதேபோல உலக அளவில் அதிகம் பேர் விளையாடும் கால்பந்துப் போட்டிகளும் இந்த முறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில் கால்பந்துதான் அவர்களுக்கு ஆக்சிஜன் போல. அப்படிப்பட்ட விளையாட்டை விளையாட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் என அனைத்து ஐரோப்பிய நாடுகளுமே கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்து திணறிக் கொண்டுள்ளன. அனைத்து போட்டிகளும் ரத்தாகி விட்டன.

ஸ்தம்பித்த விளையாட்டு உலகம்

ஸ்தம்பித்த விளையாட்டு உலகம்

இப்படி மொத்த விளையாட்டு உலகமும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில் இன்று வந்துள்ள சர்வதேச விளையாட்டு தினம் நிச்சயம் அனைவருக்குமே பெரும் ஏமாற்றம்தான். இந்த நாளை மெளனமாக மட்டுமே கொண்டாட வேண்டிய நிலையில் விளையாட்டுத் துறையினர் உள்ளனர். இதுவரை இப்படிப்பட்ட ஒரு சோகம் விளையாட்டுத்துறைக்கு ஏற்பட்டதில்ல என்பது முக்கியமானது.

Story first published: Monday, April 6, 2020, 16:07 [IST]
Other articles published on Apr 6, 2020
English summary
Today is UN International day of Sports but the whole world is not in a position to celebrate the day
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X