For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காண்டமிற்கு நோ.. மதுவிற்கு எஸ்.. டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் புதிய கட்டுப்பாடு.. என்ன காரணம்?

டோக்கியோ: டோக்கியோவில் ஒலிம்பிக் ஆட வரும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு இந்த முறை காண்டம் அளிக்கப்படாது என்று டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் 23ம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் நடக்க உள்ளது. கொரோனாவிற்கு இடையே இந்த போட்டிகள் நடக்க உள்ள நிலையில் இதற்காக பல்வேறு புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

ஓய்வு பெற்று 7 வருடம் ஆனது.. இன்றும் சச்சினுக்கு உலகளவில் பெரும் சொத்துமதிப்பு..கோலியே பின்னாடி தான் ஓய்வு பெற்று 7 வருடம் ஆனது.. இன்றும் சச்சினுக்கு உலகளவில் பெரும் சொத்துமதிப்பு..கோலியே பின்னாடி தான்

ஆகஸ்ட் 8ம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்க உள்ளன. கடந்த வருடம் நடக்க வேண்டிய போட்டிகள் கொரோனா காரணமாக இது வருடம் தள்ளி வைக்கப்பட்டது. மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் இந்த வருடம் ஒலிம்பிக் நடக்க உள்ளது.

பார்வையளக்கிறாள்

பார்வையளக்கிறாள்

இந்த போட்டிகளுக்கு பார்வையாளர்களாக மக்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடக்கிறது. தொடக்க விழாவிற்கு 20000 பேர். மற்றும் தினசரி போட்டிகளுக்கு 10000 பேர் என்ற அளவில் அனுமதிக்கலாம் என்று முதல் கட்ட ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட முடிவுகள் விரைவில் எடுக்கப்படும்.

கொரோனா

கொரோனா

கொரோனா கேஸ்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பார்வையாளர்கள் இதைவிட குறைவாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. இன்னொரு பக்கம் கொரோனா பரவல் காரணமாக டோக்கியோவில் ஒலிம்பிக் ஆட வரும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு காண்டம் அளிக்கப்படாது. எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று 1988ல் இருந்து காண்டம் அளிக்கப்பட்டு வருகிறது.

காண்டம்

காண்டம்

சியோல் ஒலிம்பிக் இருந்து ஒலிம்பிக் ஆட வரும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு காண்டம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா காலம் என்பதால், வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த காண்டம் வழங்கப்படவில்லை. ஆனால் வீரர்கள் ஜப்பானை விட்டு செல்லும் நாளில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காண்டம் கொடுக்கப்படும்.

மது

மது

அதே சமயம் வீரர்கள் வெளியே பாரில் மது குடிப்பதை தடுக்கும் வகையில் டோக்கியோவில் ஒலிம்பிக் நடக்கும் ஒலிம்பிக் வில்லேஜுக்குள் மது குடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீரர்கள், வீராங்கனைகள் மது பாட்டிலை வெளியே வாங்கி,உள்ளே தங்கள் அறைக்கு கொண்டு சென்று குடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, June 29, 2021, 16:09 [IST]
Other articles published on Jun 29, 2021
English summary
Tokyo Olympics 2020: Alcohol allowed but no Condoms distribution due to safety issues says committe.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X