For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜொலிக்க தவறிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி.. மீண்டும் எழுந்தும் பயனில்லை.. ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வி

ஜப்பான்: ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி ஏமாற்றம் அளித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கின் 2வது நாளான இன்றும் இந்தியாவை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவின் ஒரே நம்பிக்கை பொய்யானது.. மகளிர் நீச்சல் போட்டி..மானா படேல் 2வதாக வந்தும் பதக்கம் இல்லைஇந்தியாவின் ஒரே நம்பிக்கை பொய்யானது.. மகளிர் நீச்சல் போட்டி..மானா படேல் 2வதாக வந்தும் பதக்கம் இல்லை

இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கி காலிறுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது.

ஆடவர் அணி அசத்தல்

ஆடவர் அணி அசத்தல்

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்தை 3 - 1 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி இன்று காலிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தகுதிச்சுற்றில் இந்தியாவுக்கு இருந்த வேகம் காலிறுதிப்போட்டியில் இல்லை. இதனால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது.

கோல் மழை

கோல் மழை

ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடி வந்த ஆஸ்திரேலியா, அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து 4 - 0 என்ற கணக்கில் வலுவான நிலையில் இருந்தனர். அப்போதும் விடாப்பிடியாக போராடிய இந்திய அணியில் ருபிந்தர் பால் சிங் ஓரு கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். எனினும் அந்த கோல் பலனிக்கவில்லை.

நம்பிக்கை போனது

நம்பிக்கை போனது

இந்திய அணி ஒருகட்டத்திலாவது மீண்டு வந்துவிடும் என எதிர்பாப்பு இருந்த சூழலில் ஆஸ்திரேலியா கோல் மழை பொழிந்து அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால் ஆட்ட நேர முடிவில் 7- 1 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதனால் இந்தியாவுக்கு இருந்த பெரும் நம்பிக்கை உடைந்துள்ளது.

அடுத்த ஆட்டம்

அடுத்த ஆட்டம்

இந்தியாவின் ஆண்கள் ஹாக்கி அணி ஏமாற்றத்தை கொடுத்துள்ளதால், ரசிகர்களின் பார்வை தற்போது மகளிர் ஹாக்கி அணியின் மீது திரும்பியுள்ளது. இந்திய மகளிர் அணி நாளை நடைபெறும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் ஜெர்மணியை எதிர்கொள்கிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் நெதர்லாந்து அணியிடம் இந்திய மகளிர் அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 25, 2021, 21:53 [IST]
Other articles published on Jul 25, 2021
English summary
After the fantastic won in 1st match, Team India defeated by Australia in the points of 7-1 in men's hockey
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X