For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பயனளிக்காத பஞ்ச்கள்..குத்துச்சண்டையில் இந்தியாவின் 2வது வீரரும் ஏமாற்றம்..ஆஷஷ் குமார் தோற்றது எப்படி

ஜப்பான்: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் அஷிஷ் குமார் எந்தவித ஆக்ரோஷ ஆட்டமும் இன்றி தோல்வியை சந்தித்துள்ளார்.

Recommended Video

Tokyo Olympics 2020: Fencing Match 2வது சுற்றில் Bhavani Devi அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கின் இன்றைய தினத்தில் இந்திய அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைத்து வருகிறது.

இன்று காலை வாள்வீச்சு போட்டியில் பவானி தேவி, டேபிள் டென்னிஸில் மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் தோல்வியடைந்திருந்தனர். இந்நிலையில் குத்துச்சண்டையிலும் ஆஷிஷ் குமார் ஏமாற்றம் அளித்துள்ளார்.

ஒலிம்பிக் 2020.. ஸ்கீட் ஷூட்டிங்கிலும் பெருத்த ஏமாற்றம்.. இந்திய வீரர்கள் மை ராஜ் & அங்கத் தோல்வி! ஒலிம்பிக் 2020.. ஸ்கீட் ஷூட்டிங்கிலும் பெருத்த ஏமாற்றம்.. இந்திய வீரர்கள் மை ராஜ் & அங்கத் தோல்வி!

தொடக்கம்

தொடக்கம்

69 கிலோ எடை பிரிவில் கலந்துக்கொண்ட ஆஷிஷ் குமார், சீனாவின் எரிபியேக் துஹேடாவை எதிர்த்து போட்டிப்போட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆஷிஷ் குமாரின் ஆக்ரோஷம் மிஸ் ஆனது. இதனால் ஆட்டத்தின் முதல் சுற்றில் 0 - 5 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீரர் வென்றார்.

பயனளிக்காத பஞ்ச்

பயனளிக்காத பஞ்ச்

ஆஷிஷ் குமார் பஞ்ச்-களை சரிவர கொடுத்தாலும், அவை சீனாவின் எரிபியேக் துஹேடாவிடம் பயனளிக்கவில்லை. இதனால் 2வது சுற்றிலும் அவரால் மீண்டு வர முடியவில்லை. இறுதியில் 2வது சுற்றையும் சீன வீரர் எரிபியேக் 0 - 5 என்ற வெற்றி பெற்றார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இருந்து அவர் வெளியேறினார்.

விகாஷ் கிஷன்

விகாஷ் கிஷன்

முன்னதாக நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட விஷாஷ் கிஷண் தோல்வியை தழுவினார். ஜாப்பானின் குயுன்சி செவான்ரெட்ஸ் ஒகாசாவாவை எதிர்கொண்ட அவர், 10 - 9 ,10 - 9, 10 - 8 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவி வெளியேறினார்.

ஒரே ஆறுதல்

ஒரே ஆறுதல்

குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பதே தற்போது இருக்கும் ஆறுதலான விஷயமாகும். நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் மேரி கோம் 4-1 என்ற கணக்கில் டொமினிகாவின் மிகுஎலினா ஹெர்னாண்டஸ் கார்சியாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

Story first published: Monday, July 26, 2021, 19:20 [IST]
Other articles published on Jul 26, 2021
English summary
Boxer Ashish Kumar crashes out after losing 0-5 against Erbieke in Round of 32 bout
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X