‘வென்று வா வீரர்களே’ யுவனின் குரலில்.. தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ.- வைரல்!

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் சாதித்து வரவேண்டும் என்பதற்காக தமிழக வீரர் மு.க.ஸ்டாலின் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 23ம் தேதி தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்களது முழு திறன்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒலிம்பிக் 2020.. ஸ்கீட் ஷூட்டிங்கிலும் பெருத்த ஏமாற்றம்.. இந்திய வீரர்கள் மை ராஜ் & அங்கத் தோல்வி! ஒலிம்பிக் 2020.. ஸ்கீட் ஷூட்டிங்கிலும் பெருத்த ஏமாற்றம்.. இந்திய வீரர்கள் மை ராஜ் & அங்கத் தோல்வி!

12 தமிழர்கள்

12 தமிழர்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர், பல பிரிவுகளின் கீழ் பங்கேற்கவுள்ளனர். முக்கியமாக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், வாள் சண்டை பிரிவில் பவானி தேவி, டேபிள் டென்னிஸில் சதயன் ஞானசேகரன் , வருண் அசோக் தக்கர் (படகுப் போட்டி - ஆண்கள் பிரிவு), இளவேனில்வளரிவன் உள்ளிட்டவர்கள் அடங்குவார்கள்.

நம்பிக்கை வீரர்கள்

நம்பிக்கை வீரர்கள்

இதில் வாள்சண்டை, துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் தமிழக வீரர்கள் ஏற்கனவே போராடி தோல்வியை சந்தித்துள்ளனர். பாய்மர படகுப்போட்டியில் நேத்ரா குமணன் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். தடகள போட்டிகளில் தமிழகத்தில் இருந்து 5 பேர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

பாடல் வீடியோ

இந்நிலையில் தமிழக வீரர்கள் பதக்கங்களுடன் வர உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். "வென்று வா வீரர்களே" என்ற அந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஊக்கத்தொகை

ஊக்கத்தொகை

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி, வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ளும் தமிழக வீரர்கள், வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CM MK.Stalin Posted a new video song to cheer up for Indian Athelets in Olympics
Story first published: Monday, July 26, 2021, 23:20 [IST]
Other articles published on Jul 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X