வாண வேடிக்கைகளுடன் நிறைவடைந்தது டோக்கியோ ஒலிம்பிக்ஸ்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்? - முழு விவரம்

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் தொடர் வாண வேடிக்கைகளுடன் சிறப்பான முறையில் நிறைவடைந்துள்ளது. வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்புடன் போட்டிகள் நிறைவடைந்தன.

உலகின் மிகப்பெரும் விளையாட்டு திருவிழாவாக பார்க்கப்படும் ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 23ம் தேதி தொடங்கியது. கடந்தாண்டே நடைபெற்றிருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது.

ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தது பதக்கப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட இந்தியா பாகிஸ்தானின் மோசமான நிலைஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தது பதக்கப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட இந்தியா பாகிஸ்தானின் மோசமான நிலை

மொத்தம் 17 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு பதக்கங்கள், வெற்றிகள், தோல்விகள் என விறுவிறுப்பாக நடைபெற்றது. உலக நாடுகள் பதக்கங்களை குவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மொத்தம் 86 நாடுகள் பதக்கத்தை வென்றுள்ளன. 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. 88 பதக்கங்களுடன் சீனா 2வது இடம் பிடித்துள்ளது. சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் வென்றுள்ளது. போட்டியை நடத்தி வரும் ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் வென்று 58 பதக்கங்களை வென்று 3வது இடத்தை பிடித்துள்ளது.

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து 22 தங்கம் உட்பட 65 பதக்கங்களுடன் 4ம் இடம் வகித்து வருகிறது. ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 20 தங்கம் உட்பட 71 பதக்கங்களுடன் 5ம் இடம் வகித்து வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா 17 தங்கம், 7 வெள்ளி, 22 வெண்கலம் வென்று 46 பதக்கங்களுடன் 6வது இடத்தையே பிடித்துள்ளது. சிரியா ஒரே ஒரு வெண்கலப்பதக்கத்துடன் 86வது இடத்தை பிடித்து கடைசி அணியாக உள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

பி.வி.சிந்து, மீராபாய், ரவிக்குமார் தஹியா, இந்திய ஆடவர் ஹாக்கி அணி, நீரஜ் சோப்ரா, பஜ்ரங் புனியா, லாவ்லினா ஆகியோரால் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்று இந்தியா பதக்க பட்டியலில் 48வது இடத்தை பிடித்துள்ளது.

நிறைவு நிகழ்ச்சி

நிறைவு நிகழ்ச்சி

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் நிறைவு நிகழ்ச்சிகள் வாண வேடிக்கைகளுடன் சிறப்பாக நடைபெற்றது. டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் ஜப்பான் இளவரசர் மற்றும் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஆகியோர் முதலில் வரவேற்கப்பட்டு வாண வேடிக்கைகள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அணிவகுப்பு நிகழ்ச்சி

அணிவகுப்பு நிகழ்ச்சி

ஜப்பான் நாட்டு அணியினர் முதலாவதாக தேசியக்கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர். அப்போது அந்நாட்டின் தேசியக்கொடி இசைக்கப்பட்டது. இதன் பின்னர் வரிசையாக அனைத்து நாட்டு அணியினரும் தங்களது தேசியக்கொடியை ஏந்திச்சென்றனர். இந்தியாவின் சார்பில் மல்யுத்த வீரர் பஜ்ரங் சோப்ரா தேசியக்கொடியை ஏந்திச்சென்றார். இவர் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவர் ஆவார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
After the 17 days of Competitions, Tokyo Olympics 2020 Games are get over with Closing ceremony at Olympic stadium
Story first published: Sunday, August 8, 2021, 17:43 [IST]
Other articles published on Aug 8, 2021

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X