For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோற்றாலும் லட்சக்கணக்கில் பரிசுத்தொகை.. அள்ளித்தரும் ஹரியானா அரசு..வீராங்கனைகளுக்கு மகிழ்ச்சி செய்தி

டோக்கியோ: ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடியிருந்த இந்திய ஹாக்கி அணியில் ஹரியானவை சேர்ந்த வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது அம்மாநில அரசு.

ஒலிம்பிக்கில் கடந்த பல வருடங்களாக சறுக்கல்களை சந்தித்து வந்த இந்திய ஹாக்கி அணிகளுக்கு இந்தாண்டு ஒலிம்பிக் தொடர் மிக சிறப்பாக அமைந்துள்ளது. ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் நேற்று ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெண்கல பதக்கம் வென்றது.

41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைத்தது. இதன் மூலம் ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்ற ஹாக்கி அணியாக
உருவெடுத்துள்ளது. மகளிர் அணியும் பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியை தழுவியது.

வெண்கலப்பதக்க போட்டி

வெண்கலப்பதக்க போட்டி

இன்று இந்திய மகளிர் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மோதியது. இந்த போட்டியில் கிரேட் பிரிட்டன் அணியை இந்திய பெண்கள் ஹாக்கி அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் தொடக்கமே கிரேட் பிரிட்டன் அணிக்கு சாதகமாக அமைந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் பிரிட்டன் அணி முதல் கோல் போட்டது. இந்தியாவின் தீப் கிரேஸ் செய்த தவறால் "செல்ப் கோல்" விழுந்தது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

அதன்பின் தொடர் ஆக்ரோஷத்தை காட்டிய பிரிட்டன் அணி 23வது நிமிடத்தில் இரண்டாவது கோல் போட்டது. இதனால் 2 - 0 என முன்னிலை பெற்றது. இதன்பின்தான் இந்திய பெண்கள் அணி சிறப்பான கம்பேக் கொடுத்து அடுத்தடுத்து 3 கோல்களை போட்டது. கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இறுதியில் ஜெர்மனி அணி 4 - 3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றது.

 தோற்றாலும் பரிசு

தோற்றாலும் பரிசு

ஒலிம்பிக்கில் பங்குபெற்றுள்ள இந்திய வீரர்,வீராங்கனைகள் பதக்கம் வென்றால் பரிசுத்தொகை வழங்கப்படும் என பல்வேறு மாநில அரசுகள் அறிவித்திருந்தன. இந்நிலையில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியிலும் தோல்வியடைந்த வீராங்கனைகளுக்கு ஹரியானா மாநில அரசு பரிசுத்தொகை அளித்து ஊக்குவித்துள்ளது.

பரிசுத்தொகை அறிவிப்பு

பரிசுத்தொகை அறிவிப்பு

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள ஹரியானா முதல்வர் மனோகர் லால், ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள 9 ஹரியானா வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்திய அணியில், கேப்டன் ராணி ராம்பால், நவ்ஜோத் கௌர், சவிதா புனியா, நேஹா கோயல், மோனிகா மாலிக், நவ்னீத் கௌர், நிஷா, ஷர்மிளா தேவி, உதிதா ஆகியோர் ஹரியானாவை சேர்ந்தவர்கள் ஆகும்.

வீரர்கள் 2 பேர்

வீரர்கள் 2 பேர்

இதுமட்டுமல்லாமல் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹாக்கி அணியில் இடம்பெற்ற 2 ஹரியானா வீரர்களுக்கும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி அவர்களுக்கு தலா ரூ.2.5 கோடி வழங்க முதல்வர் மனோகர் லால் உத்தரவிட்டுள்ளார். இத்துடன் சேர்த்து அவர்களுக்கு அரசுப்பணி, குறைந்த விலையில் காலி வீட்டுமனையும் வழங்கப்படவுள்ளது.

ரவி தஹியா

ரவி தஹியா

இதே போல மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள ரவிக்குமார் தஹியாவுக்கும் பரிசுத்தொகை அறிவித்துள்ளது ஹரியானா அரசு. ரவிக்குமார் ஹரியானாவை சேர்ந்தவர் ஆகும். எனவே அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்தபடி ரவிக்குமார் தஹியாவுக்கு ரூ.4 கோடி பரிசுத்தொகை வழங்கவுள்ளது. இதே போல அவருக்கு முதல் தர அரசுப்பணி, ஹரியானாவில் காலி வீட்டுமனையும் குறைந்த விலையில் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லமால் ரவிக்குமாரின் கிராமத்திற்கு அருகில் மல்யுத்தத்திற்கான ஸ்டேடியம் ஒன்றும் கட்டப்படும் என அறிவித்துள்ளது.

Story first published: Friday, August 6, 2021, 22:08 [IST]
Other articles published on Aug 6, 2021
English summary
Haryana Govt, to give Rs 50 lakh each to state’s women’s players in Indian hockey team of Tokyo Olympics 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X