தடகள போட்டி : தமிழக வீரர்கள் தோல்வி முகம்.. கலப்பு பிரிவுக்கான போட்டியில் ஏமாற்றம்!

ஜப்பான்: ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று இந்தியாவுக்கு சிறப்பான நாளாக அமைந்துள்ளது. குத்துச்சண்டை, பேட்மிண்டன், ஹாக்கி என தொடர் வெற்றிகள் கிடைத்தன.

இந்நிலையில் தடகள போட்டியில் 4*400 மீ பிரிவுக்கான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து ஏமாற்றியுள்ளது.

கலப்பு பிரிவு போட்டியான இதில் இந்தியாவின் சார்பில் முகமது அனாஸ், தமிழகத்தை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். ஒலிம்பிக் வரலாற்றில் 4*400 மீட்டர் கலப்பு ரிலே பிரிவு தடகள போட்டியில் இந்திய அணி தகுதிப்பெற்றது இதுவே முதல் முறை. எனவே இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 8வது இடத்தை பிடித்தது. அவர்கள் போட்டி தூரத்தை 3.19.93 விநாடிகளில் கடந்தது. இந்த போட்டியில் இதன் மூலம் நாளை நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் வாய்ப்பை இழந்தனர். முதலிடத்தை போலாந்து அணியும், 2வது இடத்தை நெதர்லாந்து அணியும் பிடித்தது.

முன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 100மீட்டர் பிரிவுக்கான போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை டூட்டி சந்த் கலந்துக்கொண்டார். ஹீட் 1 பிரிவில் மொத்தம் 8 வீராங்கனைகள் பங்கேற்றிருந்த நிலையில், டுட்டி சந்த் 7வது இடத்தையே பிடிக்க நேர்ந்தது.ஒலிம்பிக் விதிகளின் படி, முதல் மூன்று இடங்களுக்குள் வந்தவர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற முடியும். இதனால், இந்திய வீராங்கனை டுட்டி சந்த்தின் 100 மீ கனவு முடிவு வந்துவிட்டது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
In the Tokyo Olympics 4*400 mixed relay, Indian team finish eight in heat 2
Story first published: Friday, July 30, 2021, 18:21 [IST]
Other articles published on Jul 30, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X