For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் நம்பிக்கை தகர்ந்தது.. ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார் மேரிகோம்.. 2 சுற்றை வென்றும் வீண்

ஜப்பான்: ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் 2 சுற்றில் வெற்றி பெற்றும் காலிறுதிக்கு முன்னேறவில்லை.

ஒலிம்பிக்கின் 6வது நாளான இன்றும் இந்தியாவுக்கு சற்று சாதகமான சூழலாகவே அமைந்துள்ளது.

வில்வித்தை, பேட்மிண்டன், ஹாக்கி என்று இந்தியா காலிறுதி வரை முன்னேறிச் சென்றுக் கொண்டிருக்கிறது.

ஒலிம்பிக் 2020 குத்துசண்டை.. குறையாத வேகம்.. அதே பன்ச்.. முதல் போட்டியிலேயே மேரி கோம் தரமான வெற்றி! ஒலிம்பிக் 2020 குத்துசண்டை.. குறையாத வேகம்.. அதே பன்ச்.. முதல் போட்டியிலேயே மேரி கோம் தரமான வெற்றி!

இந்தியர்களின் நம்பிக்கை

இந்தியர்களின் நம்பிக்கை

அந்தவகையில் குத்துச்சண்டை போட்டியிலும் பதக்க வாய்ப்பை அதிகரித்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீரர் மேரி கோம். டோக்கியோ ஒலிம்பிக்கில் பிளைவெயிட் பிரிவு முதல் சுற்றில் டோமினிகா குடியரசு வீராங்கனை மிக்லினா கார்ஸியா மோதினார்.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 4 -1 என்ற கணக்கில் மேர் கோம் அபார வெற்றி பெற்றார்.

தடுமாற்றம்

தடுமாற்றம்

இந்நிலையில், இன்று காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டி நடைபெற்றது. இதில் மேரி கோம், கொலம்பியா வீராங்கனை இங்கிரிட் வெலன்சியாவை எதிர்த்து போட்டியிட்டார். தொடக்கத்தில் இங்கிரிட்டின் கையே ஓங்கி இருந்ததால் முதல் இரு சுற்றில் 4 - 1 என்ற கணக்கில் மேரி கோம் மோசமாக தவறவிட்டார்.

மேரி கோமின் கம்பேக்

மேரி கோமின் கம்பேக்

பின்னர் சுதாரித்துக்கொண்ட மேரிக்கோம் 2வது சுற்றில் ஆக்ரோஷ பஞ்ச்-களை கொடுத்தார். எனினும் எதிரணி வீராங்கனையும் விட்டுக்கொடுக்கவில்லை. மிகவும் பரபரப்பாக சென்ற இந்த 2வது சுற்றின் முடிவில் மேரி கோம் 3 - 2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கம்பேக் கொடுத்தார்.

கடைசி நேர பரபரப்பு

கடைசி நேர பரபரப்பு

இதன் பிறகு வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி மற்றும் 3வது சுற்றுப்போட்டி நடைபெற்றது. இந்த சுற்றிலும் விட்டுக்கொடுக்க கூடாது என விடாப்படியாக இருந்த இருவரும் மாறி மாறி புள்ளிகளை குவித்து வந்தனர். ஆனால் இந்த சுற்று மேரிகோமின் பக்கமே சென்றது. 3வது சுற்றின் முடிவில் 3 - 2 என்ற கணக்கில் மேரி கோம் கைப்பற்றினார்.

 போராடி தோல்வி

போராடி தோல்வி

ஆட்டத்தின் 2 சுற்றுகளை வென்ற போதும் மேரிகோமுக்கு தோல்வியே மிஞ்சியது. மேரி கோம் கைப்பற்றிய 2 சுற்றுகளின் புள்ளி வித்தியாசங்கள் 3 -2, 3 - 2 ஆகும். ஆனால் முதல் சுற்றில் கொலம்பியா வீராங்கனை வென்ற புள்ளி வித்தியாசம் 1 - 4 ஆகும். எனவே புள்ளி வித்தியாச அளவை வைத்து கணக்கிடும் போது, இந்த போட்டியில் மேரி கோம் தோல்வியடைந்தார். மேலும் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டார். இதன் மூலம் மேரி கோமின் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.


Story first published: Thursday, July 29, 2021, 18:51 [IST]
Other articles published on Jul 29, 2021
English summary
Indian Boxer Mary Kom Eliminated in Tokyo Olympics 2020, Loses to Ingrit Valencia via split decision
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X