For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லோவ்லினாவின் காலிறுதி ஆட்டம்... வியந்துப்போன ஜாம்பவான்கள்.. பதக்கம் குறித்து நெகிழ்ச்சி பதிவுகள்!

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 2வது பதக்கத்தை உறுதி செய்துள்ள லோவ்லினாவின் ஆட்டத்தை பார்த்து ஜாம்பவான்கள் மேரிகோம், விஜேந்தர் சிங் ஆகியோர் வியந்துள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடங்கியது முதல் இந்தியாவுக்கு பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு பெற்றுக்கொடுத்த வெள்ளிப்பதக்கம் மட்டுமே ஆறுதலாக இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று ஒலிம்பிக் மகளிர் பாக்ஸிங் 69 கிலோ பிரிவு போட்டியில் இந்தியாவின் லோவ்லினா காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு 3வது பதக்கம்.. பேட்மிண்டனில் உறுதி செய்தார் பிவி.சிந்து.. அரையிறுதிக்கு முன்னேற்றம்! இந்தியாவுக்கு 3வது பதக்கம்.. பேட்மிண்டனில் உறுதி செய்தார் பிவி.சிந்து.. அரையிறுதிக்கு முன்னேற்றம்!

தொடக்கம்

தொடக்கம்

இந்தியாவின் லோவ்லினா போர்கோஹைன் தனது முதல் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை நதின் அபேட்ஸை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி லோவ்லினா வெற்றிபெற்றார். இதையடுத்து இன்று அவருக்கான காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில் சீனாவின் தைபே வீராங்கனை சின் தைனை எதிர்கொண்டார்.

காலிறுதியில் வெற்றி

காலிறுதியில் வெற்றி

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆக்ரோஷ பஞ்ச்-களால் ஆதிக்கம் செலுத்திய லோவ்லினா, முதல் சுற்று முடிவில் 10 புள்ளிகளை பெற்று முன்னிலை வகித்தார். பின்னர் 2வது சுற்றிலும் 3வது சுற்றிலும் வோல்வினவின் கையே ஓங்கி இருந்தது. இதன் மூலம் சீன தைபே வீராங்கனை சின் தைனை 4:1 என்ற கணக்கில் வீழ்த்தி லோவ்லினா வெற்றி பெற்றார்.

உறுதியான பதக்கம்

உறுதியான பதக்கம்

அரையிறுதி போட்டிக்கு லோவ்லினா தகுதி பெற்றதால் ஒரு பதக்கம் உறுதியானது. அடுத்த போட்டியில் தோல்வி அடைந்தால் கூட இந்தியாவிற்கு குறைந்தது வெண்கல பதக்கமாவது கிடைக்கும். ஆனால் லோவ்லினா கண்டிப்பாக தங்கம் வெல்ல அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்த்து மழை

வாழ்த்து மழை

இந்நிலையில் பதக்க நாயகிக்கு இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீரர்களான மேரிகோம், விஜேந்தர் சிங் ஆகியோர் பாராட்டுத்தெரிவித்துள்ளனர். ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற முதல் வீரர் விஜேந்தர் (2008) மற்றும் வீராங்கனை மேரிகோம் ( 2012) ஆவர். இருவருமே வெண்கல பதக்கத்தை வென்றவர்கள். இதுகுறித்து பேசியுள்ள ஜிதேந்தர் சிங், 'பதக்க குழுவுக்கு வரவேற்கிறோம்'. என்ன ஒரு அற்புதமான போட்டி. லோவ்லினா தனது வலதுகை பஞ்ச்-களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அவரின் ஆட்டம், என்னுடையை சிறுவயது போட்டிகளை நினைவுப்படுத்துகிறது எனத்தெரிவித்துள்ளார்.

மேரிகோம் வாழ்த்து

மேரிகோம் வாழ்த்து

லோவ்லினாவுக்கு வாழ்த்து தெரிவித்த மேரி கோம், இந்த பதக்கத்திற்காகதான் நாம் அனைவரும் காத்திருந்தோம். அனைவரும் கடினமாக உழைத்தோம். தற்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பதக்கம் வெல்வதற்கான அனைத்து தகுதிகளையும் உடையவள் லோவ்லினாவாகும் எனக்கூறியுள்ளார். இதே போல பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Story first published: Friday, July 30, 2021, 16:05 [IST]
Other articles published on Jul 30, 2021
English summary
Indian boxing Legends Vijender Singh, Mary Kom congratulate Lovlina Borgohain for Tokyo Olympics Victory
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X