For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே நாளில் 4 அரையிறுதி போட்டிகள்.. இந்தியாவுக்கு இன்று செம நாள்.. படு உச்சத்தில் எதிர்பார்ப்பு!

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கின் இன்றைய நாள் இந்தியாவுக்கு பதக்கங்களை குவிக்கும் நாளாக அமைய வாய்ப்புள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் பதக்கங்களை வென்றுவிட்டனர். குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லினா காலிறுதிப்போட்டியில் வென்று பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

ஒலிம்பிக் 2020 மல்யுத்தம்.. இந்தியாவின் அன்ஷு மாலிக் தோல்வி.. ரெப்சேஜ் முறைக்கு அதிக வாய்ப்பு! ஒலிம்பிக் 2020 மல்யுத்தம்.. இந்தியாவின் அன்ஷு மாலிக் தோல்வி.. ரெப்சேஜ் முறைக்கு அதிக வாய்ப்பு!

இந்நிலையில் இன்று இந்தியாவுக்கு 4 அரையிறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளது. மல்யுத்தப்போட்டியில் மேலும் 2 வீரர்கள் அசத்தியுள்ளதால் அடுத்த பதக்கத்தை யார் உறுதி செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரவிக்குமார்

ரவிக்குமார்

ஒலிம்பிக் 2020 தொடரின் பல்வேறு பிரிவு மல்யுத்த போட்டிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று காலை மல்யுத்தத்தின் ஆண்கள் 57 kg பிரிவு- 1/8 பைனல் ஆட்டத்தில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா வெற்றி பெற்றார். .இவர் கொலம்பியாவின் டைக்ரசை எதிர்கொண்ட அவர் எளிதாக 13:2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

அரையிறுதி

அரையிறுதி

காலிறுதிப்போட்டியும் இன்று காலையே நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா, பல்கேரியா வீரர் ஜார்ஜி வாலண்டினோவை எதிர்கொண்டார். இந்த போட்டியிலும் தொடக்கம் முதல் ஆக்ரோஷம் காட்டிய ரவிக்குமார் தஹியா 14 - 4 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளார். அரையிறுதிப்போட்டியில் கசகஸ்தானை சேர்ந்த நுரிஸ்லாம் சனாயெவை எதிர்கொள்ளவுள்ளார். இந்த அரையிறுதிப்போட்டி இன்று மதியம் 2.45 மணிக்கு தொடங்குகிறது.

மல்யுத்த வீரர் தீபக்

மல்யுத்த வீரர் தீபக்

இன்று இன்னொரு பக்கம் ஒலிம்பிக் 2020 மல்யுத்தத்தின் ஆண்கள் 86kg பிரிவு- 1/8 பைனல் ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபக் புனியா நைஜீரியா நாட்டின் அகிமிரோவை எதிர்கொண்டார். இதில் தொடக்கத்தில் இருந்தே தீபக் புனியா ஆதிக்கம் செலுத்திய தீபக் புனியா, நைஜீரியா நாட்டின் அகிமிரோவை 12:1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் தீபக் புனியா மல்யுத்தத்தின் ஆண்கள் 86kg பிரிவு ஆட்டத்தில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அரையிறுதி

அரையிறுதி

இன்று காலை நடைபெற்ற காலிறுதிப்போட்டியிலும் தீபக் புனியா தனது ஆதிக்கத்தை காட்டினார். இந்த காலிறுதிப்போட்டியில் சீன வீரர் லின் சூசனை எதிர்த்து தீபக் போட்டியிட்டார். இதிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், 6 - 3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளார். அரையிறுதியில் அமெரிக்காவின் டேவிட் டெய்லரை அவர் எதிர்கொள்ளவுள்ளார். இந்த போட்டி இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஹாக்கி போட்டி

ஹாக்கி போட்டி

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி தொடரின் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது. வலுவான ஆஸ்திரேலிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் ஹாக்கி இந்திய வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று இந்திய மகளிர் அணிக்கான அரையிறுதிப்போட்டி நடைபெறவிருக்கிறது. இந்தியா - அர்ஜெண்டினா மோதும் இந்த போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

குத்துச்சண்டை

குத்துச்சண்டை

ஒலிம்பிக் பெண்கள் பாக்சிஸில் இந்தியாவின் இளம் வீராங்கனை லாவ்லினாவின் பக்கம் அனைவரிம் பார்வையும் திரும்பியுள்ளது. 69 கிலோ பிரிவு போட்டியிட்ட லோவ்லினா காலிறுதி போட்டியில் சீன தைபே வீராங்கனை சின் தைனை எதிர்கொண்டார். கொஞ்சம் கூட கேப் விடாமல் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே லோவ்லினா, 4:1 என்ற கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப்பெற்றிருந்தார்.

அரையிறுதி

அரையிறுதி

அரையிறுதி போட்டிக்கு லோவ்லினா தகுதி பெற்றதால் ஒரு பதக்கம் உறுதியானது. அடுத்த போட்டியில் தோல்வி அடைந்தால் கூட இந்தியாவிற்கு குறைந்தது வெண்கல பதக்கமாவது கிடைக்கும். ஆனால் லோவ்லினா கண்டிப்பாக தங்கம் வெல்ல அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கான அரையிறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. டர்கி நாட்டு வீராங்கனை புசேனாஸுக்கு எதிரான இந்த போட்டி இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

Story first published: Wednesday, August 4, 2021, 11:44 [IST]
Other articles published on Aug 4, 2021
English summary
Indian Contigent will have to face 4 semi finals Today in Tokyo Olympics 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X