For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகுமா? 41 ஆண்டுகால காத்திருப்புக்கு பலன்.. இணையத்தை கலக்கும் புகைப்படம்!

ஜப்பான்: இந்தியாவின் 41 ஆண்டுகால காத்திருப்பை பூர்த்தி செய்த இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மண்ப்ரீத் சிங் மகிழ்ச்சியில் அழுத புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கின் 9வது நாளான இன்று இந்தியாவுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்று பெருமை சேர்த்து கொடுத்தார்.

33 வருட ரெக்கார்ட் காலி.. 100மீ பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் 3 பதக்கங்களையும் அள்ளிய ஜமைக்கா.. சாதனை 33 வருட ரெக்கார்ட் காலி.. 100மீ பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் 3 பதக்கங்களையும் அள்ளிய ஜமைக்கா.. சாதனை

இந்நிலையில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் தனது பங்கிற்கு காலிறுதிப்போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பரிசு கொடுத்துள்ளது.

முதல் சுற்று

முதல் சுற்று

டோக்கியோ ஒலிம்பிக்கின் காலிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் கிரேட் பிரிட்டன் அணியை எதிர்த்து இந்திய ஆடவர் அணி போட்டிப்போட்டது. லீக் போட்டிகளில் 3 வெற்றிகளை தனதாக்கிய இந்திய அணி, மிகுந்த நம்பிக்கையுடன் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அட்டாக்கிங் கேம்மை மேற்கொண்டது. இதனால் ஆட்டத்தின் முதல் சுற்றில் கோல் அடித்து முன்னிலைப் பெற்றது. இந்தியாவின் தில்பிரீத் சிங் இந்த கோலினை அடித்தார்.

2ம் கோல்

2ம் கோல்

இடைவெளிக்கு பின்னர் நடந்த 2வது சுற்றுப்போட்டியிலும் இந்திய அணியின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. இந்திய வீரர்கள் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து 3 - 0 என்ற கணக்கில் வலுவான நிலைக்கு சென்றது. ஆனால் திடீரென பிரிட்டன் அணி பெனால்டி கார்னர் மூலம் அந்த அணியின் சாம் வார்ட் கோல் அடித்தார். இறுதியில் கிரேட் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து இந்திய அணிக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

வரலாற்று சாதனை

வரலாற்று சாதனை

ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் இந்திய அணி ஒருகாலத்தில் கொடி கட்டி பறந்து வந்தது. ஒலிம்பிக்கில் மட்டும் இதுவரை 11 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்திய அணி. அதில் 8 தங்கப்பதக்கங்கள், 1 வெள்ளி, 2 வெங்கலப்பதக்கங்கள் ஆகும். வேறெந்த அணியாலும் இன்னமும் இந்த சாதனையை உடைக்க முடியவில்லை. ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி 1980ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை ஒரு முறை கூட பதக்கத்தை வெல்லவில்லை. பதக்கம் வென்று 41 ஆண்டுகள் ஆகிவிட்டது.

வைரல் போட்டோ

வைரல் போட்டோ

இந்நிலையில் 41 ஆண்டுகால இந்தியாவின் காத்திருப்பை ஆடவர் ஹாக்கி அணி இன்று பூர்த்தி செய்துள்ளது. மிகவும் உணர்ச்சிகரமான இந்த நேரத்தில் வெற்றி பெற்றவுடன் இந்திய அணி கேப்டன் மண்ப்ரீத் சிங் ஆனந்த கண்ணீர் வடித்தார். மேலும் பயிற்சியாளர் ஒருவரை கட்டினைத்து அழுத புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Monday, August 2, 2021, 7:45 [IST]
Other articles published on Aug 2, 2021
English summary
Indian men's hockey team captain Manpreet singh Picture goes viral on internet, after defeated Great britain 3 -1 in Quarter final, Qualified for Semi's in Tokyo Olympics 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X