ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய சீன வீராங்கனை.. மீரா பாய்-க்கு தங்கம் வெல்ல வாய்ப்பா.. உண்மை என்ன?

ஜப்பான்: ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஸீஹுய் ஹோ ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால், இந்தியாவின் மீரா பாய்க்கு தங்கம் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

China வீராங்கனை மீது ஊக்கமருந்து சர்ச்சை.. Mirabai Chanu-க்கு தங்கம் வெல்ல வாய்ப்பு ?

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் வென்று கொடுத்தார்.

2020 ஒலிம்பிக் புள்ளிகள் பட்டியல்.. 6 தங்கத்தோடு சீனா முதலிடம்.. 24வது இடத்திற்கு பின்தங்கிய இந்தியா 2020 ஒலிம்பிக் புள்ளிகள் பட்டியல்.. 6 தங்கத்தோடு சீனா முதலிடம்.. 24வது இடத்திற்கு பின்தங்கிய இந்தியா

கடந்த ஜூலை 24ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் 202 கிலோ எடையை தூக்கி அவர் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

ஒலிம்பிக் பதக்கம்

ஒலிம்பிக் பதக்கம்

மகளிர் பளுதூக்குதலில் 49 கிலோ எடை பிரிவில் கலந்துக்கொண்ட இந்திய வீராங்கனை மீராபாய் சானு ஸ்நாட்ச் பிரிவில் இவர் 87 கிலோ தூக்கி இருந்தார். அதன்பின்னர் நடைபெற்ற க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ தூக்கி அசத்தினார். இதன் மூலம் மொத்தம் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். அதேசமயம், சீனாவின் ஜிஹுய் ஹூ 210 கிலோ மொத்த எடை தூக்கி தங்கம் வென்றிருந்தார்.

ஊக்க மருந்து பரிசோதனை

ஊக்க மருந்து பரிசோதனை

இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை ஜீஹுய் ஹூ ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த சனிக்கிழமை பதக்கம் வென்ற அவரை நாடு திரும்ப வேண்டாம் எனக்கூறியுள்ள ஒலிம்பிக் அமைப்பு, அவருக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. ஒருவேளை அவர் அந்த பரிசோதனை தோல்வியடைந்தால், ஒலிம்பிக் விதியின் படி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள மீரா பாய்-க்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

உண்மை நிலவரம் என்ன?

உண்மை நிலவரம் என்ன?

டோக்கியோ ஒலிம்பிக்கை பொறுத்தவரை சுமார் 5,000 வீரர்களுக்கு போட்டிக்கு முன்னதாகவும், போட்டிகள் முடிந்த பின்னரும் வழக்கமான முறையில் ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது. அதில் ஒருவர் தான் சீன வீராங்கனை ஜீஹுய் ஹூவும் ஒருவர். எனவே அவருக்கு ஊக்கமருந்து பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வருவதற்கு பெரும் அளவில் வாய்ப்புகள் இருக்கிறதா என்பது சந்தேகமே.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆனால் தற்போது இருந்தே சமூக வலைதளங்களில் சீன வீராங்கனைக்கு ஊக்கமருந்து பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்திருப்பதாகவும், மீராபாய்-க்கு தங்கம் வெல்ல வாய்ப்பு அமைந்திருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. அவரின் உண்மையான பரிசோதனை முடிவுகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Tokyo Olympics 2020: Mirabai Chanu's Olympics silver medal to be updated to gold? Weightlifter Hou to be tested by anti-doping authorities
Story first published: Monday, July 26, 2021, 14:15 [IST]
Other articles published on Jul 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X