For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"அடுத்து அதைதான் செய்யப்போகிறேன்".. அரையிறுதியில் தோல்வி.. மனம் உருகி பேசிய பி.வி.சிந்து!

ஜப்பான்: ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பி.வி.சிந்து உருக்கமாக பேசியுள்ளார்.

Recommended Video

PV Sindhu loses to Tai Tzu Ying in semi final! | Tokyo Olympics | OneIndia Tamil

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இன்று இந்தியாவுக்கு மிக முக்கியமான போட்டியாக மகளிர் பேட்மிண்டன் அரையிறுதிப்போட்டி நடைபெற்றது.

அரையிறுதி சுற்றுக்கு முன்னர் வரை நடைபெற்ற அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில் இன்று பி.வி.சிந்துவுக்கான அரையிறுதிப்போட்டி நடைபெற்றது.

மன ரீதியான பிரச்னை.. இந்தியாவின் பி.வி.சிந்து எடுத்த அதிரடி முடிவு.. சிமோனின் விவகாரத்தில் கருத்து மன ரீதியான பிரச்னை.. இந்தியாவின் பி.வி.சிந்து எடுத்த அதிரடி முடிவு.. சிமோனின் விவகாரத்தில் கருத்து

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

இந்த அரையிறுதிப்போட்டியில் இந்தியாவின் சிந்து மற்றும் சீனாவின் தைபே வீராங்கனையான தாய் சூ யிங் (Tai Tzu-ying) மோதிக்கொண்டனர். போட்டியின் தொடக்கத்தில் பி.வி.சிந்துவின் கையே ஓங்கி இருந்தது. இதனால் புள்ளிகள் வித்தியாசமும் ஓரளவிற்கு அதிகமாக இருந்தன. ஆனால் முதல் சுற்றின் நடுவே திடீரென கம்பேக் கொடுத்த சீன வீராங்கனை தாய் ட்சூ யிங், புள்ளிகளை குவித்து தலைவலி ஏற்படுத்தினார். நீண்ட நேரம் சமநிலையாக சென்ற முதல் செட்டின் இறுதியில் சீன வீராங்கனை 22 -18 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

2வது சுற்று

2வது சுற்று

2வது சுற்றில் இந்தியாவின் சிந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் சீன வீராங்கனையே ஆதிக்கம் செலுத்தினார். தொடக்கத்தில் 4 -4 என சமநிலையில் இருந்த புள்ளிகள் பின்னர் எதிரணியின் பக்கம் சாய தொடங்கியது. இதனால் 2வது சுற்றிலும் 22 - 12 என்ற கணக்கில் சிந்து தோல்வியை தழுவினார். இதன் மூலம் 22 - 18, 21 -12 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் தாய் ட்சூ யிங் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த பி.வி.சிந்து, இந்த முறை நிச்சயம் தங்கப்பதக்கம் வென்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல அனைத்து போட்டிகளிலும் தொடர் வெற்றிகளை பதிவு செய்து வந்தார். ஆனால் அவர் தற்போது வெள்ளிப்பதக்கம் கூட பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

மனம் திறந்த சிந்து

மனம் திறந்த சிந்து

இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வியடைந்தது குறித்து சிந்து உருக்கமாக பேசியுள்ளார். எனக்கு சிறிது வருத்தமாக உள்ளது. ஏனென்றால் இது அரையிறுதிப்போட்டி. என்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. இன்றைய நாள் என்னுடையது இல்லை என்றுதான் கூற வேண்டும். 2வது செட்டில் நான் நிறைய புள்ளிகளை வாரி வழங்கிவிட்டேன். இருப்பினும் அதில் இருந்து மீண்டு வர கடுமையாக போராடினேன். கடைசி வரை போராட வேண்டும். நான் அதை செய்தேன்.

தயாராக வேண்டும்

தயாராக வேண்டும்

என்னதான் நாம் சகஜமாக இருந்தாலும் அரையிறுதிப்போட்டி என்பது மிகப்பெரிய ஒன்றாகும். எனவே அதில் நாம் சுலபமாக புள்ளிகளை பெற்றுவிடலாம் என எண்ண முடியாது. எப்போதும் வெற்றி பெறும் பக்கமே இருக்க முடியது. தற்போதைக்கு நான் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். இது இன்னும் முடியவில்லை. அடுத்த போட்டியில் சிறப்பாக ஆடுவேன் என நம்புகிறேன். இன்று என்னுடைய நாளல்ல, ஆனால் நாளை நான் முயற்சி செய்வேன்.

Story first published: Saturday, July 31, 2021, 20:47 [IST]
Other articles published on Jul 31, 2021
English summary
Indian Badminton Player P.V.sindhu opened about his lose in Badminton semifinals of Tokyo Olympics 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X