For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீச்சல் முதல் உணவு வரை.. 120 கிமீ பயணம் முதல் அற்பணிப்பு வரை.. .சிந்து குறித்து தெரியாத விஷயங்கள்!

ஜப்பான்: பேட்மிண்டன் குறித்த செய்திகளில் மட்டும் வரும் பி.வி.சிந்து குறித்து யாருக்கும் தெரியாத 8 விஷயங்களை பார்க்கலாம்.

Recommended Video

PV Sindhu Unknown Facts | Tokyo Olympics | Who Is PV Sindhu? | Oneindia Tamil

டோக்கியோ ஒலிம்பிக்கில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்து கிட்டத்தட்ட ஒருவார காலம் ஆகப்போகிறது. அதன்பிறகு இத்தனை நாட்களாக ஒரு பதக்கம் கூட இல்லாமல் இருந்த இந்தியாவுக்கு இன்று சிறப்பாக அமைந்துள்ளது.

33 வருட ரெக்கார்ட் காலி.. 100மீ பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் 3 பதக்கங்களையும் அள்ளிய ஜமைக்கா.. சாதனை 33 வருட ரெக்கார்ட் காலி.. 100மீ பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் 3 பதக்கங்களையும் அள்ளிய ஜமைக்கா.. சாதனை

மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

வெண்கலப்பதக்கம்

வெண்கலப்பதக்கம்

நேற்று அரையிறுதி தோல்வியை தழுவிய பி.வி.சிந்து இன்று வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை ஹீ பிங் ஜியாயோவை எதிர்த்து சிந்து போட்டியிட்டார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சிந்து 21 -13, 21 - 15 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் கைப்பற்றினார். ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பெரும் 2வது பதக்கம் இதுவாகும். இந்நிலையில் பேட்மிண்டன் தவிர்ந்து சிந்து குறித்து யாருக்கும் தெரியாத விஷயங்களை பார்க்கலாம்.

குடும்பம்

குடும்பம்

புசரலா வெங்கட சிந்து 1995ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பி.வி. ரமணா மற்றும் பி.விஜயா ஆகியோருக்கு பிறந்தவர் ஆவார். சிந்துவின் தாய் - தந்தை இருவருமே தேசிய அளவிலான வாலிபால் வீரர்கள் ஆகும். குறிப்பாக அவரின் தந்தை கடந்த 2000ம் ஆண்டு மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றுள்ளார். இதன் காரணத்தினாலேயே சிந்துவுக்கும் சிறு வயது முதலே விளையாட்டு போட்டிகளின் மீது அதிக ஆர்வம் வந்தது.

120 கிமீ

120 கிமீ

சிந்துவுக்கு சிறுவயது முதலே பேட்மிண்டன் விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அவரின் வீட்டில் இருந்து பயிற்சி மையத்திற்கு செல்ல 60கிமீ தூரம் ஆகும். எனவே சிந்துவின் தந்தை ரமணா தினமும் காலை 3 மணிக்கே எழுந்து சிந்துவை அழைத்துக்கொண்டு போவதற்கு, வருவதற்கு என மொத்தம் 120கிமீ பயணம் செய்துள்ளனர். சமீபத்தில் தான் பயிற்சி அகாடமிக்கு அருகில் தனது வீட்டை மாற்றிக்கொண்டு சென்றார்.

பேட்மிண்டனுக்காக அர்பணிப்பு

பேட்மிண்டனுக்காக அர்பணிப்பு

பி.வி.சிந்துவின் மூத்த சகோதரி பி.திவ்யாவுக்கு கடந்த 2012ம் ஆண்டு ஐதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. ஆனால் அப்போது சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொள்ள விரும்பிய சிந்து, சகோதரியின் திருமணத்திற்கு கூட செல்லாமல் லக்னோ சென்றுவிட்டார்.

கண்டிப்பு

கண்டிப்பு

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் பி.வி.சிந்து தான் ஆகும். 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் நடந்தது. ஆனால் அது அவருக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. பயிற்சியின் போது அவரின் கவனம் சிதறிவிடக்கூடாது என்பதற்காக,சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த், சுமார் 3 மாதத்திற்கு சிந்துவின் செல்போனை பிடிங்கி வைத்துக்கொண்டார். வெள்ளிப்பதக்கம் வென்றவுடன் தான் அதனை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சரிய பரிசு

அச்சரிய பரிசு

கடந்த 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து தனது வெள்ளிப்பதக்கத்தை வென்றார். அதனை இன்னும் சிறப்புப்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சிந்துவுக்கு பிஎம்டபள்யூ கார் ஒன்றை வாங்கி பரிசளித்தார். இது அப்போது சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டது.

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

பேட்மிண்டனில் தலைசிறந்த வீராங்கனையாக விளங்கும் சிந்துவுக்கு நீச்சல் மற்றும் தியானம் செய்வது மட்டுமே பிடித்த செயல்கள் ஆகும். தான் மகிழ்ச்சியுடன் இருக்கும் அனைத்து சமயத்திலும் நீச்சல் குளத்தில் நேரத்தை செலவளிப்பார் என கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மனநிலையை சரியாக வைத்துக்கொள்ள தினமும் தியானம் செய்கிறார்.

Foodie

Foodie

ஒலிம்பிக் வெற்றியாளர் பி.வி.சிந்து விளையாட்டு வீராங்கனை என்பதால் உணவுப்பழக்கத்தில் கண்டிப்பாக இருப்பார் என அனைவரும் நினைக்கலாம். ஆனால் அவர் மிகப்பெரும் உணவுப்பிரியர். அவரின் சமூக வலைதளப்பக்கங்களை பார்த்தாலே அவர் உணவின் மீது எவ்வளவு நாட்டம் உள்ளவர் என்பது தெரிந்துவிடும். வித விதமான உணவுகளை தேடிச்சென்று அவர் உண்பார் எனவும் கூறப்படுகிறது.

Story first published: Monday, August 2, 2021, 7:45 [IST]
Other articles published on Aug 2, 2021
English summary
PV Sindhu won 2nd medal in Olympics, 8 Little-Known Facts about her
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X