தந்தையின் அந்த ஒற்றை வார்த்தை.. சாத்தியமான 2வது பதக்கம்.. சோகத்தில் இருந்த சிந்து கம்பேக் ஆன பின்னணி

ஜப்பான்: பி.வி.சிந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் வெற்றி பெற்றதற்கு பின்னணியில் நடந்த கதையை அவரின் தந்தை உடைத்துள்ளார்.

PV Sindhu Emotional Moment | Tokyo Olympics | Oneindia Tamil

டோக்கியோ ஒலிம்பிக்கின் 9வது நாளான இன்று இந்தியாவுக்கு மிகச்சிறப்பானதாக அமைந்துள்ளது. ஒலிம்பிக்கில் மீராபாய் வென்று கொடுத்த வெள்ளிப்பதக்கம் மட்டுமே கணக்காக இருந்த நிலையில் இன்று மேலும் ஒரு பதக்கம் கூடியுள்ளது.

மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார்.

ஒலிம்பிக் 2020.. 50மீ நீச்சலில் அமெரிக்காவின் கேலிப் டிரெஸ்ஸல் ஒலிம்பிக் சாதனை.. மொத்தமாக 5 தங்கம்! ஒலிம்பிக் 2020.. 50மீ நீச்சலில் அமெரிக்காவின் கேலிப் டிரெஸ்ஸல் ஒலிம்பிக் சாதனை.. மொத்தமாக 5 தங்கம்!

நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் சீன வீராங்கனையிடம் பி.வி தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தார். முதல் சுற்றில் ஓரளவிற்கு போராடிய அவர் 2வது சுற்றிலும் முற்றிலும் சரணடைந்தார். இதனால் 21 - 18, 21 - 12 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து தோல்வியை தழுவினார். இதனால் அவரின் வெள்ளிப்பதக்க கனவு தகர்ந்தது. இந்நிலையில் அவரின் வெங்கலப்பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது.

முதல் செட்

முதல் செட்

இதில் சீனாவின் ஹீ பிங் ஜியாயோவை எதிர்த்து பி.வி.சிந்து மோதினார். நேற்றைய போட்டியில் விட்ட ஆக்ரோஷத்தை இந்த போட்டியில் பி.வி.சிந்து தொடக்கம் முதலே காட்டி வந்தார். சீன வீராங்கனை கம்பேக் கொடுக்க நினைத்த போதும் கூட பி.வி.சிந்து அவரை அடக்கினார். இதனால் முதல் சுற்று போட்டியை 21 - 13 என்ற கணக்கில் பி.வி.சிந்து கைப்பற்றினார்.

2வது பதக்கம்

2வது பதக்கம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2வது சுற்றுப்போட்டியிலும் பி.வி.சிந்துவின் கையே ஓங்கி இருந்தது. இதனால் முதல் சில புள்ளிகளை பி.வி.சிந்து மலமலவென உயர்த்தினார். ஆனால் சீன வீராங்கனை திடீர் கம்பேக் கொடுத்து புள்ளி வித்தியாசத்தை குறைத்தார். இதனால் 2வது சுற்றில் யார் வெற்றி பெறுவார் என பரபரப்பு எழுந்தது. ஒருகட்டத்தில் சுதாரித்துக்கொண்ட பி.வி.சிந்து தொடர் ஆக்ரோஷ ஷாட்களை வைத்து மிரட்டினார். இதனால் 2வது சுற்றும் என்ற கணக்கில் சிந்துவின் பக்கம் சாய்ந்தது. இதனையடைத்து 21 - 13, 21 - 15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை வென்றார் பி.வி.சிந்து.

வெற்றியின் பின்னணி

வெற்றியின் பின்னணி

இந்நிலையில் நேற்றைய போட்டியின் தோல்வி அடைந்த வருத்தத்தில் இருந்த சிந்து, இன்றைய போட்டியில் எப்படி வென்றார் என்ற பின்னணி தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேசிய சிந்துவின் தந்தை ரமணா, அரையிறுதி தோல்விக்கு பிறகு சிந்து என்னிடம் பேசினார், ஓர் நம்பிக்கை தரும்படியான வார்த்தைகள் அவருக்கு தேவைப்பட்டது. எனவே வெண்கலப்பதக்கத்தை தந்தைக்கு நீ பரிசாக கொடுக்க வேண்டும். அதற்காக கண்டிப்பாக நீ அதனை வெல்ல வேண்டும் எனக்கூறியிருந்தேன். தற்போது என் மகள் பரிசளித்துவிட்டால்.

தந்தையின் அறிவுறுத்தல்

தந்தையின் அறிவுறுத்தல்

நாங்கள் தங்கப்பதக்கம் தான் எதிர்பார்த்தோம். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். ஆனால் வெண்கலப்பதக்கத்திலும் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். சிந்து மிகச்சிறப்பாக விளையாடினார். நேற்றைய தோல்விக்கு பிறகு சிந்து நிறைய கண்ணீர் சிந்தினார். ஆனால் அதில் இருந்து சரியாகி கம்பேக் கொடுத்து பெருமைப்படுத்தியுளார். மொத்தத்தில் அவர் இன்றைய போட்டியில் மிக ஆக்ரோஷமாக விளையாடினார். நான் அவரிடம் தொடர்ந்து அட்டாக்கிங் கேம் தான் ஆட வேண்டும், ரிப்பீட்டட் ஷாட்களையே தொடர வேண்டும் என எப்போது அறிவுறுத்துவேன். அது இன்று பலனளித்துள்ளது என மகிழ்ச்சி தெரிவித்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
PV Sindhu's Father Ramana Shared his Happiness after she grabs her 2nd olympic medal inTokyo Olympics 2020
Story first published: Sunday, August 1, 2021, 23:21 [IST]
Other articles published on Aug 1, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X