For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2 வருடத்திற்கு பிறகு வீட்டுச் சாப்பாடு.. மூக்குப்பிடிக்க.. ஒரு பிடி பிடித்த "வெள்ளி மங்கை" மீரா பாய்

ஜப்பான்: ஒரு வீரர் வெற்றிப் பெறுகிறாரா, தோல்வி அடைகிறாரோ.. அவரது உழைப்புக்கு பின் பல தியாகங்கள் இருக்கும். பலரின் தியாகங்களும் இருக்கும்.

Recommended Video

Who Is Mirabai Chanu? India’s first medal at Tokyo Olympics 2020

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் சார்பில் பதக்கப் பட்டியலை துவக்கி வைத்தவர் மீராபாய் சானு.

ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ உடல் எடைப்பிரிவில் பளுத்தூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமைத் தேடித் தந்தவர் மீராபாய்.

ஒலிம்பிக் தடகளம்.. 3000மீ Steeplechase தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் தோல்வி ஒலிம்பிக் தடகளம்.. 3000மீ Steeplechase தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் தோல்வி

 இன்பத்தின் எல்லை

இன்பத்தின் எல்லை

நாமெல்லாம் அவர் மெடல் வென்றதற்கு மகிழ்ச்சியாக கொண்டாடினால், அவரது அதிகபட்ச மகிழ்ச்சி எங்கிருக்கிறது தெரியுமா? அவரது வீட்டுச் சாப்பாட்டில். அவரது வீட்டில் தயாரிக்கப்பட்ட, அவருக்கு பிடித்த உணவுகளை உண்பதே அவரது மகிழ்ச்சியின், இன்பத்தின் எல்லையாக இருக்கிறது.

 பாதுகாவலர்கள் புடைசூழ

பாதுகாவலர்கள் புடைசூழ

ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று நாடு திரும்பிய மீராபாய் சானுவுக்கு, அவர் கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வரவேற்பு கொடுக்கப்பட்டது. பாதுகாவலர்கள் புடைசூழ அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட போதே, அவர் இந்தியாவின் முக்கியமான நபர்களில் ஒருவராகிவிட்டார். தங்கள் மகளை மீராபாய் பெற்றோரால் கூட அவ்வளவு எளிதில் பார்க்க முடியவில்லை.

 வீட்டு உணவு

வீட்டு உணவு

வரவேற்பின் போது, தனது தாயாரை கண்ட மீராபாய் சானு, மகிழ்ச்சியில் வெடித்து அழுததை எவருமே மறந்திருக்க முடியாது. இந்நிலையில், லோ மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து, இன்று ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்திருக்கும் மீராபாய் சானு, தனது வீட்டில் சமைக்கப்பட்ட உணவை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

 எளிய மகள்

எளிய மகள்

அப்போது கூட அதனை அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக வெளிப்படுத்துகிறார் தெரியுமா? அவர் தனது டீவீட்டில், "இறுதியில் வீட்டில் சமைத்த சாப்பாட்டை உண்ணும் போது வரும் அந்த சிரிப்பு" என்று தனது உண்மையான நிம்மதியை பிரதிபலிக்கும் வகையில் கேப்ஷனிட்டுள்ளார். பாருங்க.. ஒலிம்பிக்கில் மெடல் வென்றவர் இவர். ஆனால், தட்டு நிறைய சாப்பாட்டை வைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் எளிய இந்திய மகளாக சிம்மாசனமிட்டே அமர்ந்துவிட்டார் மீராபாய் சானு.

Story first published: Friday, July 30, 2021, 16:06 [IST]
Other articles published on Jul 30, 2021
English summary
Tokyo Olympics silver medalist Mirabai Chanu - மீராபாய் சானு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X