For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதே கம்பீர நடை.. நாடு திரும்பினார் மீரா பாய்.. கோஷங்களால் அதிர்ந்த டெல்லி விமான நிலையம்- வீடியோ

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த மீரா பாய் நாடு திரும்பினார்.

Recommended Video

Who Is Mirabai Chanu? India’s first medal at Tokyo Olympics 2020

கடந்த 3 நாட்களிலும் இந்திய அணி பல போட்டிகளில் சறுக்கல்களை சந்தித்திருந்தாலும், ஒரே ஆறுதலாக அமைந்திருப்பது மீரா பாய் வென்று கொடுத்த வெள்ளிப்பதக்கம் தான்.

நீச்சல் போட்டி: அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டார் சாஜன் பிரகாஷ்.. எனினும் பதக்கம் வெல்ல மற்றொரு வழி!நீச்சல் போட்டி: அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டார் சாஜன் பிரகாஷ்.. எனினும் பதக்கம் வெல்ல மற்றொரு வழி!

கடந்த ஜூலை 24ம் தேதியன்று பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற மீரா பாய் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி அசத்தினார்.

ஒலிம்பிக் பதக்கம்

ஒலிம்பிக் பதக்கம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் ஸ்நாட்ச் முறையில் 87 கிலோவும் க்ளீன் அண்டு ஜெர்க் முறையில் 115 கிலோ தூக்கி அசத்தினார் மீராபாய் சானு. இதன் மூலம் மொத்தம் மொத்தமாக 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியா பெறும் 2வது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் கர்ணம் மல்லீஸ்வரி வெங்கல பதக்கம் பெற்றிருந்தார்.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். தனது வெற்றி குறித்து பேசியிருந்த அவர், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற என் கனவு நனவாகியுள்ளது. இந்த பதக்கத்தை என்னுடைய தேசத்துக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். எனக்காகப் பிரார்த்தனை செய்த கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி என கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

அதிர்ந்த டெல்லி

அதிர்ந்த டெல்லி

இந்நிலையில் இந்தியாவின் தங்க மங்கை மீரா பாய், பதக்கத்துடன் நாடு திரும்பினார். டோக்கியோவில் இருந்து டெல்லி வந்த அவருக்கு விமான நிலையத்தில் அதிகாரிகள், பொதுமக்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சுற்றி இருந்த பலரும் பாரத் மாதாகி ஜே கோஷங்களை எழுப்பி உற்சாகமூட்டினர்.

விரைவில் சந்திப்பு

விரைவில் சந்திப்பு

பாரத தேசத்திற்காக பதக்கத்தை வென்று கொடுத்த மீரா பாய், பெருமை மிகுந்த சிரிப்பு முகத்துடன் நடந்து சென்றார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி வந்துள்ள மீரா பாய் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெறுவார் எனக்கூறப்படுகிறது.

தங்கப்பதக்கத்திற்கு வாய்ப்பு

தங்கப்பதக்கத்திற்கு வாய்ப்பு

இதனிடையே மீரா பாய்-க்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஜீஹுய் ஹூ ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கு ஊக்க மருந்து பரிசோதனையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. ஒருவேளை அவர் அந்த பரிசோதனை தோல்வியடைந்தால், ஒலிம்பிக் விதியின் படி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள மீரா பாய்-க்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும்.

Story first published: Monday, July 26, 2021, 19:19 [IST]
Other articles published on Jul 26, 2021
English summary
Tokyo Olympics Olympic silver medallist Mirabai Chanu receives a warm welcome at the Delhi airport
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X