சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா?

டோக்கியோ: ஒலிம்பிக்கில் தற்போது பேசுப்பொருளாக உள்ள சிமோனே பில்ஸ் மேலும் 2 இறுதிப்போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த ஜூலை 23ம் தேதி தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

என்னதான் போட்டிகள் சிறப்பான நடைபெற்றாலும், மனநிலை சரியில்லாத காரணத்தால் 2 தலைசிறந்த வீராங்கனைகள் தொடரை விட்டு வெளியேறியது பரபரப்பை கிளப்பியது.

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: இந்திய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. காலிறுதிக்கு முன்னேற்றம்! ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: இந்திய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. காலிறுதிக்கு முன்னேற்றம்!

சிமோன்

சிமோன்

அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ். 6 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற உலகின் தலைசிறந்த வீராங்கனையான இவர், டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் இருந்து திடீரென வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனக்கு அதிக மன அழுத்தம் இருப்பதாகவும், மருத்துவப் பரிசோதனை செய்யவிருப்பதாகவும் கூறி அவர் வெளியேறினார். இந்தாண்டு அவர் 13.766 என்ற தனது ஒலிம்பிக் வாழ்க்கையின் மிகக் குறைந்த புள்ளிகள் பெற்ற பிறகு பைல்ஸ் அரங்கிலிருந்து வெளியேறினார்.

பேசுப்பொருள்

பேசுப்பொருள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 5 தங்கப்பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் ஏற்கனவே 2 இறுதிப்போட்டிகளில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் மேலும் 2 இறுதிப்போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார் சிமோனே பைல்ஸ். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி அறிவிப்பு

அதிர்ச்சி அறிவிப்பு

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அமெரிக்க ஜிம்லாஸ்டிக் அமைப்பு, சிமோனே இன்னும் மனநிலை பிரச்னையில் இருப்பதால் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் தனது சிகிச்சையை தொடர்ந்து எடுத்துக்கொள்வார். மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க முடியுமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்வார்.

பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

இதுபோன்ற ஒரு சூழ்நிலையை சிமோனே இவ்வளவு சிறப்பாக, நிதானமாக கையாள்வது பாராட்டுக்குறியது. அவரை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். இதே போல கடினமான சூழ்களால் தொடரில் இருந்து வெளியேறிய மேலும் சில வீரர்களை நினைத்தும் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீடிக்கும் சந்தேகம்

நீடிக்கும் சந்தேகம்

உலகில் அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீராங்கனையாக சிமோனே பைல்ஸ் திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த எதிர்பார்ப்பு சுக்கு நூறாக உடைந்துள்ளது. மீதமுள்ள போட்டிகளிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
US gymnast Simone Biles step out of two more finals in Tokyo Olympics 2020
Story first published: Saturday, July 31, 2021, 23:24 [IST]
Other articles published on Jul 31, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X