காயத்தையும் மீறி ஒலிம்பிக்கில் போட்டி.. ஆனால் விதி மாறியது.. குத்துச்சண்டை வீரரின் உருக்கமான பதிவு!

ஜப்பான்: ஒலிம்பிக்கில் 3வது முறையாக தோல்வியை சந்தித்தது குறித்து குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிரிஷண் உருக்கமாக பேசியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 3வது நாளான இன்றும் பல ஏமாற்றாங்கள் கிடைத்தது.

இந்த போட்டியில் தற்போது வரை உள்ள ஒரே ஆறுதல் மீரா பாய் வென்ற வெள்ளிப்பதக்கம் மட்டுமே. இந்நிலையில் குத்துச்சண்டையில் சாதிக்க முடியாதது குறித்து விகாஷ் கிரிஷண் வேதனை தெரிவித்துள்ளார்.
குத்துச்சண்டை

ஒலிம்பிக் 2020.. ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸிலும் சொதப்பல்.. இந்திய வீரர் சுமித் நகல் தோல்வி ஒலிம்பிக் 2020.. ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸிலும் சொதப்பல்.. இந்திய வீரர் சுமித் நகல் தோல்வி

குத்துச்சண்டை போட்டி

குத்துச்சண்டை போட்டி

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை இந்தியாவில் இருந்து இந்தாண்டு முதல் ஆளாக விகாஸ் கிஷண் அரங்கேறினார். 69 கிலோ எடை பிரிவில் கலந்துக்கொண்ட அவர், ஜாப்பானின் குயுன்சி செவான்ரெட்ஸ் ஒகாசாவாவை எதிர்கொண்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஜப்பானிய வீரரின் கையே ஓங்கி இருந்தது.

விகாஸ் கிஷண் சிறப்பாக விளையாடிய போதிலும் அவரின் பஞ்ச்-கள் ஒகாசாவாவிடம் பயனளிக்கவில்லை. இதனால் 10 - 9, 10 - 9, 10 - 8 என்ற புள்ளிக்கணக்கில் ஜப்பான் வீரர் ஒசாகாவா வெற்றி பெற்றார். இதன் மூலம் விகாஸ் கிஷண் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.

நம்பிக்கை பொய்யானது

நம்பிக்கை பொய்யானது

29 வயதாகும் விகாஷ் கிரிஷணுக்கு இது 3வது ஒலிம்பிக் தொடராகும். ஒலிம்பிக் பதக்கத்தை தவிர கிட்டத்தட்ட அனைத்து பதக்கங்களையும் கையில் வைத்துள்ளார். இந்த முறை நிச்சயம் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியே மிஞ்சியது. ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக விஷான் காயத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். ஒலிம்பிக்கிற்கான பயிற்சி போட்டியின் போது அவருக்கு தோள்பட்டை அருகே பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் மன தைரியத்துடன் ஒலிம்பிக்கில் பங்கேற்றார்.

விதி மாறியது

விதி மாறியது

இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். காயத்தால் பாதிக்கப்பட்ட போதும் நான் ஒலிம்பிக்கில் வென்று காட்ட வேண்டும் என நினைத்தேன். எனக்கு ஏற்பட்ட காயம் மன ரீதியாக பாதித்துவிடக்கூடாது என்பதற்காகவே ஒலிம்பிக்கில் விடாப்பிடியாக களமிறங்கினேன். இத்தனை ஆண்டுகள் நான் கற்றது, பயிற்சி மேற்கொண்ட வித்தைகளை இதில் செயல்படுத்தவிருந்தேன். ஆனால் விதி மாறி அமைந்துள்ளது.

நம்பிக்கை

நம்பிக்கை

தோல்விக்கு பின்னர் எனது நண்பர்களையும், பெற்றோர்களையும் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டேன். வருத்தப்பட்டு அழுதேன். ஆனால் நான் அடுத்த முறை பெரும் பலத்துடன் களமிறங்குவேன். எனது குத்துச்சண்டை வாழ்க்கை இன்னும் முடியவடையவில்லை. எனவே மீண்டும் ஒலிம்பிக்கிற்கு வருவேன் எனக்கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
After the Loss in First match, Indian Boxer Vikash Krishnan says, I was in tears after first round exit and said sorry to my parents
Story first published: Monday, July 26, 2021, 23:48 [IST]
Other articles published on Jul 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X