ஒரே இடத்தில் 15 நாட்டு தலைவர்கள்.. சிறப்பு பெற்ற டோக்கியோ ஒலிம்பிக்..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

டோக்கியோ: உலகமே எதிர்பார்த்து காத்திருந்த டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் தொடங்கியது. இதில் கலந்துக்கொண்ட தலைவர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கொரோனா காரணமாக கடந்தாண்டு தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் மிகுந்த பாதுகாப்புகளுக்கு இடையே இன்று தொடங்கியுள்ளது.

டோக்கியோவில் உள்ள சர்வதேச மைதானத்தில் வாண வேடிக்கைகளுடன் இந்த தொடக்க விழா நடைபெற்றது.

உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொடங்கியுள்ளது. எந்தவித மக்கள் ஆரவாரமும் இன்றி நடத்தப்பட்டுள்ளது. டோக்கியோவில் அமைந்துள்ள சர்வதேச மைதானத்தில் வான வேடிக்கைகளுடன் தொடங்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் 1000 நபர்களுக்கும் குறைவாகவே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த தொடக்க விழாவில் கலந்துக்கொள்ள 15 நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்திருந்தனர். அதன்படி அவர்கள் அனைவருமே இன்றைய தொடக்க விழாவில் கலந்துக்கொண்டிருந்தனர். இதில், பிரெஞ்ச் நாட்டின் அதிபர் இமானுவேல் மாக்ரான், மங்கோலிய பிரதமர் லுவ்சானம்ஸ்ராய் உள்ளிட்டோரும் அடங்குவர். ஜப்பான் நாட்டின் பேரரசரான நரிட்டோ போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் பைடனின் மனைவி ஜில் பிடன் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்கு சென்றடைந்த அவர் ஜப்பானின் இளவரசர் நரீட்டோவுடன் பேசினார். பின்னர் ஃப்ரெஞ்ச் அதிபர் இமானுவேல் மாக்ரானுடனும் சிறிதி நேரம் கலந்து பேசினார். இதுமட்டுமல்லாமல் மற்ற நாட்டு தலைவர்களின் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

ஜப்பான் இளவரசர் நரிட்டோவுடன் கலந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் மற்றும் ஜப்பான் இளவரசர் நரிட்டோ

ஃப்ரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் மற்றும் ஸ்விஸ் அதிபர் கய் பெர்மெலின்

மொனாக்கோ நாட்டின் இளவரசர் 2ம் ஆல்பர்ட்

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Country Leaders who participated in Olympic opening ceremony pictures are goes viral on internet
Story first published: Friday, July 23, 2021, 22:29 [IST]
Other articles published on Jul 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X