For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடுத்த வருஷம் ஒலிம்பிக் போட்டி நடக்கலன்னா ரத்துதான் செய்யணும்...ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு

டோக்கியோ : கொரோனா வைரஸ் காரமணாக இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியவில்லை எனில் அதை ரத்துதான் செய்ய வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக வீரர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் இது மிகப்பெரிய சவால் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒலிம்பிக்ல வேற கலர் கோப்பையை வெல்றதுதான் இப்போதைக்கு ஒரே லட்சியம்ஒலிம்பிக்ல வேற கலர் கோப்பையை வெல்றதுதான் இப்போதைக்கு ஒரே லட்சியம்

அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு

அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு

டோக்கியோவில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரேனா வைரஸ் பாதிப்பு காரணமாக அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளன. போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கும் முடிவு அறிவிப்பு

ஒத்திவைக்கும் முடிவு அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் ஆகியோர் கலந்தாலோசித்து ரத்து செய்யும் முடிவை எடுத்தனர். ஏற்கனவே பாதிக்கும் மேற்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில்தான் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இல்லையெனில் ரத்து செய்யப்படும்

இல்லையெனில் ரத்து செய்யப்படும்

இந்நிலையில் அடுத்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லையெனில், அதை ரத்து தான் செய்ய வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரவில்லையென்றால் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டும் நடத்தப்படாது என்ற பிரதமர் ஷின்சோ அபேவின் கருத்துக்கு பதிலளிக்கையில் தாமஸ் பாக் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐஓசி தலைவர் அறிவிப்பு

ஐஓசி தலைவர் அறிவிப்பு

கொரோனா வைரசிற்கு ஜப்பானில் 17,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 797 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஷின்சோ அபேவின் சூழலை தான் புரிந்துக் கொண்டுள்ளதாக பாக் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளை நிர்வகிப்பதற்கு எப்போது 3,000 முதல் 5,000 வரை ஊழியர்களை நியமித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீரர்களை காக்கவைக்க முடியாது

வீரர்களை காக்கவைக்க முடியாது

மேலும் ஒவ்வொரு வருடமும் விளையாட்டு திட்டங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்க முடியாது என்றும் வீரர்களையும் காத்திருக்க வைக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறினார். போட்டிகளுக்கு முன்னதாக வீரர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தற்போது போடப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி உலகத்தின் நிலைப்பாடு குறித்து அறிந்தவுடன் இறுதி திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 21, 2020, 17:19 [IST]
Other articles published on May 21, 2020
English summary
Bach said he understood Japan PM's position on Olympic 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X