For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீ சட்டி எடுத்துட்டு வா.. நான் பானை எடுத்துட்டு வர்றேன்.. ஜாலியா விளையாடலாம்

டெல்லி: இது ஒரு காமெடியான விளையாட்டு.. வாங்க இதையும் விளையாடிப் பார்க்கலாம். லாக்டவுன் காலத்தில் இப்படித்தான் பொழுது போக்க வேண்டியுள்ளது.

கொரோனாவைரஸால் நாடெங்கும் விளையாட்டுக்கள் முடங்கிப் போய் விட்டது. இந்த வருடக் கடைசி வரை எந்த போட்டியும் நடக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள். காரணம் பல நாடுகளிலும் கொரோனா உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது.

இந்த நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தாலும் கூட விதம் விதமாக யோசித்து தங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் இப்போது ஒரு ஜாலி விளையாட்டைப் பார்ப்போம்.

அட என்னண்ணே நீங்க.. உங்க கண்ணை நீங்களே குத்திட்டீங்களே.. வடிவேலு கதையா இருக்கே!அட என்னண்ணே நீங்க.. உங்க கண்ணை நீங்களே குத்திட்டீங்களே.. வடிவேலு கதையா இருக்கே!

சட்டி பானை விளையாட்டு

சட்டி பானை விளையாட்டு

இந்த வீடியோவைப் பாருங்கள். வீட்டில் இருக்கும் பாத்திரங்கள்தான் இதில் விளையாட்டுப் பொருட்கள். குக்கர், வாணலி என விதம் விதமான நாலைந்து பொருட்களை எடுத்து இப்படி வைத்துக் கொள்ள வேண்டும். கூடவே ஒரு குட்டி மக்.. கையில் தேவைப்படும் விளையாட்டுப் பொருள் கோல்ப் பந்து. அல்லது ஏதாவது பிளாஸ்டிக் பந்து. இதை வைத்துக் கொண்டு எவ்வளவு அழகாக ஆடுகிறார்கள் பாருங்க.

பந்து தாவும் பாத்திரங்கள்

பந்தை ஒரு பாத்திரத்தின் மீது போட வேண்டும். அது ஒவ்வொரு பாத்திரமாக விழுந்து கடைசியில் அந்த மக்கில் போய் விழ வேண்டும். அப்படி விழுந்தால் பாயிண்ட். இப்படியே மாறி மாறி விளையாட வேண்டியதுதான். அதிக பாயிண்ட் எடுப்போர் வெற்றி பெறலாம். அவர்களுக்கு பரிசாக தோற்றுப் போனவர் டீ , காபி போட்டுத் தரலாம் அல்லது ஆம்லேட் போட்டுத் தரலாம்.. அல்லது ஏதாவது பரிசு கொடுக்கலாம்.

இப்படியும் விளையாடலாம்

இப்படியும் விளையாடலாம்

இந்த விளையாட்டு நம்ம ஊரிலும் கூட நிறையப் பேர் விளையாடியிருக்கலாம். ஆனால் வேறு தினுசாக விளையாடியிருக்கலாம். வீட்டோடு முடங்கிக் கிடக்கும் நிலையில் இதுபோன்ற விளையாட்டுக்கள் நம்மை உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. தாயம் ஆடுவது, செஸ் ஆடுவது போலத்தான் இதுவும் ஒரு ஜாலியான விளையாட்டு.

குழந்தைகளுடன் விளையாடுங்களேன்

குழந்தைகளுடன் விளையாடுங்களேன்

வீட்டில் உள்ள சிறார்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் கூட இதை ஜாலியாக விளையாடி அனுபவிக்கலாம். சிறுவர்களும், பெரியவர்களுமாக இணைந்தும் கூட ஆடலாம். இந்த விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர் கூட ஒரு பத்திரிகையாளர்தான். தனது தாயாருடன் இணைந்து அவர் ஆடியுள்ளார். என்ன மக்களே நீங்களும் கூட இன்று இந்த விளையாட்டை விளையாடிப் பாருங்களேன்.. மகிழ்ச்சியா இருக்கணும்.. அதுதான் முக்கியம்.

Story first published: Wednesday, April 15, 2020, 12:11 [IST]
Other articles published on Apr 15, 2020
English summary
We can try this novel game in your houses
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X