For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலாறு படைக்கும் அமீரகம்.. ஐசிசி யு 19 உலகக் கோப்பை போட்டியை நடத்தப் போகிறது!

துபாய்: ஐக்கிய அரபு அமீரகம், புதிய வரலாறு படைக்கிறது. ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் பெட்டியை நடத்த அதற்கு ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது.

இப்போதுதான் முதல் முறையாக ஒரு பெரிய ஐசிசி போட்டியை நடத்தவுள்ளது அமீரகம் என்பது குறிப்பிடத்தகக்து.

19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகப் போட்டி பிப்ரவரி 14ம் தேதி தொடங்கி மார்ச் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

7 இடங்களில் போட்டிகள்

7 இடங்களில் போட்டிகள்

அபுதாபி சையத் கிரிக்கெட் ஸ்டேடியம், அபுதாபி ஓவல் 1, அபுதாபி ஓவல் 2, ஷார்ஜா மைதானம், துபாய் கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் ஐசிசி அகாடமி ஓவல் 1, ஐசிசி அகாடமி ஓவல் 2 ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்.

1988 முதல்

1988 முதல்

இந்தப் போட்டித் தொடர் 1988ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. முதல் போட்டியை ஆஸ்திரேலியா நடத்தியது. அதன் பின்னர் 98ல் தென் ஆப்பிரிக்கா, 2000த்தில் இலங்கை, 2002ல் நியூசிலாந்து, 2004ல் வங்கதேசம், 2006ல் இலங்கை, 2008ல் மலேசியா, 2010ல் நியூசிலாந்து, 2012ல் ஆஸ்திரேலியா ஆகியவை நடத்தியுள்ளன.

மிகப் பெரிய மரியாதை

மிகப் பெரிய மரியாதை

அமீரகத்தில் 10வது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவிருப்பது குறித்து அமீரக கிரிக்கெட் வாரியத் தலைமை செயலதிகாரி டேவிட் ஈஸ்ட் கூறுகையில், இது மிகப் பெரிய மரியாதை எனறார்.

உலகப் போட்டிகளுக்கு தகுதியான நாடு

உலகப் போட்டிகளுக்கு தகுதியான நாடு

அமீரகம், உலகளவிலான போட்டிகளுக்குத் தகுதியான நாடு என்பதை இந்தப் போட்டித் தொடர் நிரூபிக்கும் என்றும் ஈஸ்ட் நம்பிக்கை தெரிவித்தார்.

அமீ்ரகத்தின் கிரிக்கெட் தொடர்புகள்

அமீ்ரகத்தின் கிரிக்கெட் தொடர்புகள்

அமீரகத்தி்ற்கும் கிரிக்கெட்டுக்கும் நிறைய நெருங்கியத் தொடர்புகள் உள்ளன. ஷார்ஜா கிரிக்கெட்டை யாருமே மறக்க முடியாது. ஒரு காலத்தில் ஷார்ஜா போட்டிகள் என்றால் மக்கள் விழுந்தடித்துப் பார்ப்பார்கள். அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் மட்டுமே இந்தப் போட்டிகளைப் பார்க்க முடியும். கலர் டிவி கூட அப்போது கிடையாது.

பாகிஸ்தானின் 2வது வீடு .. ஆப்கானி்தானுக்கு தத்து வீடு

பாகிஸ்தானின் 2வது வீடு .. ஆப்கானி்தானுக்கு தத்து வீடு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 2வது வீடாக அமீரகம் திகழ்ந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு வந்து ஆட விரும்பாத அணிகள், ஷார்ஜாவில் வந்துதான் அந்த அணியுடன் மோதிச் செல்கின்றன. அதேபோல ஷார்ஜா மைதானத்தை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தத்து வீடு போல பாவித்து இங்கேயே முகாமிட்டு செயல்பட்டு வருகிறது.

அருமையான மைதானங்கள்

அருமையான மைதானங்கள்

அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் அருமையான, எழிலார்ந்த கிரிக்கெட் மைதானங்கள் கம்பீரமாக காட்சி தருகின்றன. சர்வதேச தரத்திலான அற்புதமான ஸ்டேடியங்கள் இவை.

அருமையான போக்குவரத்து, ஹோட்டல்கள்

அருமையான போக்குவரத்து, ஹோட்டல்கள்

மேலும் அமீரகத்தில் அருமையான ஹோட்டல்கள் உள்ளன, போக்குவரத்தும் சிறப்பாக உள்ளது. கலாச்சார ரீதியாகவும் சிறப்பான ஒரு பிரதேசம்தான் அமீரகம்.

உலகின் பாதுகாப்பான பிரதேசம்

உலகின் பாதுகாப்பான பிரதேசம்

உலகில் உள்ள மிகவும் பாதுகாப்பான அமைதியான பிரதேசங்களில் அமீரகமும் ஒன்று என்பது இன்னொரு முக்கிய அம்சம்.

Story first published: Tuesday, January 28, 2014, 13:00 [IST]
Other articles published on Jan 28, 2014
English summary
The United Arab Emirates (UAE) will host a major ICC event for the very first time, with the ICC Under-19 Cricket World Cup UAE 2014 (ICC U-19 CWC) being staged there from 14 February to 1 March. The seven venues to be used for the tournament in the UAE are the Zayed Cricket Stadium, Abu Dhabi; Abu Dhabi Oval 1; Abu Dhabi Oval 2; Sharjah Cricket Stadium; Dubai International Cricket Stadium, Dubai Sports City; ICC Academy Oval 1, Dubai and the ICC Academy Oval 2, Dubai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X