கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக.. எகிறிய நீரஜ் சோப்ரா பிராண்ட் மதிப்பு - கோடிக்கணக்கில் ஒப்பந்தம்

மும்பை: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பிராண்ட் வேல்யூ தாறுமாறாக அதிகரித்துள்ளது. பல்வேறு டாப் நிறுவனங்கள் அவருடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முண்டியடிக்கின்றன.

Recommended Video

Neeraj Chopra Brings National Anthem for India in Olympics | OneIndia Tamil

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா தான் இந்திய விளையாட்டு உலகின் பேசு பொருளாக இருக்கிறார்.

ஒலிம்பிக்கில் தனி நபர் ஆட்டத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் 2வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். இதற்கு முன்னர் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.

ஒலிம்பிக் இறுதி நிகழ்ச்சி: தங்கம் வென்றாலும் கொடியேந்தி செல்ல நீரஜுக்கு வாய்ப்பு இல்லை - காரணம் என்னஒலிம்பிக் இறுதி நிகழ்ச்சி: தங்கம் வென்றாலும் கொடியேந்தி செல்ல நீரஜுக்கு வாய்ப்பு இல்லை - காரணம் என்ன

 குவியும் பரிசு

குவியும் பரிசு

ஒலிம்பிக் தொடரில் இந்தியா கடந்த 1920ம் ஆண்டு முதல் பங்கேற்று வருகிறது. பல்வேறு போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை வென்று வந்தாலும், தடகளப்போட்டியில் மட்டும் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை. இந்நிலையில் பதக்கத்திற்காக 100 ஆண்டுகளாக காத்திருந்த இந்தியாவின் ஏக்கத்தை நீரஜ் சோப்ரா போக்கினார். இவ்வாறு தேசத்திற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத் தொகைகள் குவிந்தன. பிசிசிஐ நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவித்தது. அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சார்பாக, நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்தது. மேலும், நீரஜ் சோப்ராவின் சிறப்பான சாதனையைப் பாராட்டும் சிஎஸ்கே, 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 8758 என்ற எண் கொண்ட ஒரு சிறப்பு ஜெர்சியை சிஎஸ்கே உருவாக்கவிருக்கிறது.

 மெகா ஒப்பந்தம்

மெகா ஒப்பந்தம்

இதில் முக்கியமான அம்சம் என்னவெனில், பணப் பரிசுகள் மற்றும் வரவேற்புகள் மட்டுமின்றி, இலாபகரமான பிராண்ட் அம்பாசிடர் ஒப்பந்தங்களும் கைக்கூடியுள்ளன. இதற்காக கோடிக்கணக்கில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே கிடைத்த இந்த கோடிக்கணக்கான ஒப்பந்தங்கள் இப்போது நீரஜ் சோப்ராவுக்கும் கிடைத்துள்ளன.

 புகழின் உச்சம்

புகழின் உச்சம்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளதால், வணிகத்தில் சில காலத்திற்கு ஒரு நம்பகமான பிராண்டாக நீரஜ் இருப்பதை உறுதி செய்துள்ளது, மேலும் வணிக நிறுவனங்கள் நிச்சயமாக ஒருவருக்கொருவர் இவரை ஒப்பந்தம் செய்ய போட்டிப்போடுவார்கள் என்பது உறுதி. "ஒலிம்பிக்கிற்கு முன் நீரஜின் ஒப்பந்தங்கள் ரூ. 20-30 லட்சம் வரை இருந்தது. ஆனால் இப்போது தங்கம் வென்றுள்ளதால், ஒப்பந்தங்களின் காஸ்ட் உயரும். மேலும் அவருடைய புகழ் இப்போது உச்சத்தில் இருப்பதால் ரூ. 3 கோடியை எட்டும். நீரஜுடன் பல நிறுவனங்கள் கைகோர்க்க ஆர்வமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று நீரஜின் குழுவுடன் நெருக்கமாக பணியாற்றிய மார்க்கெட்டிங் நிபுணர் நமது மைக்கேலிடம் கூறினார்.

 டாப் வரிசையில் நீரஜ்

டாப் வரிசையில் நீரஜ்

நீரஜ்ஜுடன் தற்போது எக்ஸான்மொபைல், ஜில்லெட் மற்றும் Muscle Blaze ஆகியவை ஒப்பந்தத்தில் உள்ளன. BYJU's, MRF, மஹிந்திரா போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் வணிக சந்தைப்படுத்தலில் நீரஜை முன்னணி வீரராக மாற்றும் ஒப்பந்தத்தில் என்று அந்த மார்க்கெட்டிங் நிபுணர் கூறினார். தற்போது, ​​விராட் கோலி, எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் வீரர்கள் நிறுவனங்களின் முக்கிய இலக்குகளாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக கேஎல் ராகுல், ஆர் அஸ்வின், பிவி சிந்து மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்கள் உள்ளனர். விரைவில் நீரஜும் அந்த வரிசையில் சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஸ்பெஷல் ஜெர்சி

ஸ்பெஷல் ஜெர்சி

நீரஜுக்கு ஹரியானா அரசு ரூ .6 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது. தவிர குரூப் 1 வேலையும் அறிவித்துள்ளது. பஞ்சாப் அரசு 2 கோடி அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக இருக்கும் BYJU's நிறுவனமும் அதே தொகையை அறிவித்துள்ளது. நாம் முன்பே சொன்னது போல் மணிப்பூர் அரசு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஐபிஎல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஆகியவை தலா 1 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளன. இண்டிகோ ஏர்லைன்ஸ் நீரஜுக்கு 1 வருட காலத்திற்கு இலவச விமான பயண ஆஃபர் கொடுத்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா நீரஜிற்கு XUV 700 வாகனத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார், இதன் விலை சுமார் 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Neeraj Chopra rewards, brand endorsements - நீரஜ் சோப்ரா
Story first published: Tuesday, August 10, 2021, 15:14 [IST]
Other articles published on Aug 10, 2021

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X