இத்தாலி வீரரைக் கடித்து மாட்டிய உருகுவேயின் சுவாரஸ்… 3வது முறையாக கடித்தார்!

By Sutha

நடால்: உலகக் கோப்பைப் போட்டியின்போது இத்தாலி வீரர் ஜியார்ஜியோ சிலெனினியின் தோள்பட்டையைக் கடித்து சிக்கியுள்ளார் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ்.

இவர் இப்படி வீரர்களைக் கடிப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் 2 முறை கடித்து சர்ச்சையைக் கிளப்பியவர்தான் சுவாரஸ்.

சுவாரஸ், சிலெனினியைக் கடிக்கும் போட்டோ ஒன்றை பிபிசி வெளியிட்டுள்ளது.

முக்கியப் போட்டியில் கடி

முக்கியப் போட்டியில் கடி

உருகுவே, இத்தாலி இரண்டுமே முன்னாள் சாம்பியன்கள். இரு அணிகளும் நடால் நகரில் நடந்த வாழ்வா சாவா போட்டியில் மோதின. அப்போதுதான் இந்தக் கடியில் ஈடுபட்டுள்ளார் சுவாரஸ்.

பெனால்டி ஏரியாவில் வைத்து

பெனால்டி பகுதியில் இரு வீரர்களும் மும்முரமாக மோதிக் கொண்டிருந்தபோது, திடீரென சிலெனினியின் தோள்பட்டையைக் கடித்துள்ளார் சுவாரஸ்.

கோல் போடுவதற்கு முன்பு

கோல் போடுவதற்கு முன்பு

இந்தக் கடிக்குப் பிறகு ஒரு நிமிடத்தில் உருகுவே தனது வெற்றிக் கோலைப் போட்டது. இப்போட்டியில் உருகுவே 1-0 என்ற கணக்கிலும் வென்றது.

இத்தாலி அவுட்- உருகுவே இன்…

இத்தாலி அவுட்- உருகுவே இன்…

இந்தப் போட்டியின் இறுதியில் இத்தாலி, உலகக் கோப்பைப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியது. அடுத்த சுற்றுக்கு உருகுவே முன்னேறியது.

2010ல் முதல் கடி

2010ல் முதல் கடி

2010ம் ஆண்டு இப்படித்தான் ஓட்மான் பக்கல் என்ற வீரரை நெதர்லாந்தில் நடந்த கிளப் போட்டியின்போது கடித்து விட்டார் சுவாரஸ். இதையடுத்து அவருக்கு நெதர்லாந்து கால்பந்துக் கழகம் 7 போட்டிகளில் ஆடத் தடை விதித்தது.

செல்சியா வீரருக்கு 2வது கடி

செல்சியா வீரருக்கு 2வது கடி

அதன் பின்னர் லிவர்பூல் அணிக்கு மாறிய சுவாரஸ், 2013ல் நடந்த செல்சியாவுக்கு எதிரான போட்டியின்போது பிரெய்ன்ஸ்லெவ் இவனோவிக்கைக் கடித்து விட்டார். இதற்காக 10 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது.

இப்ப என்ன தடையோ…

இப்ப என்ன தடையோ…

சர்வதேச கால்பந்துக் கழகம் இதுபோன்ற ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு 2ஆண்டு வரை தடை விதிக்க முடியும். அப்படிப்பட்ட தடை சுவாரஸுக்கும் கிடைக்கலாம் என்று தெரிகிறது.

கடி தாங்க முடியாமல் கத்திய சிலெனினி

கடி தாங்க முடியாமல் கத்திய சிலெனினி

சுவாரஸ் கடித்ததுமே வலி தாங்க முடியாமல் கத்தினார் சிலெனினி. ஆனால் நடுவர்களோ அதைக் கண்டு கொள்ளத் தவறி விட்டனர். ஆனாலும் விடா, சிலெனினி நடுவர்களிடம் போய் சட்டையை அகற்றி பல் பட்ட காயத்தைக் காட்டி எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் சுவாரஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Uruguay striker Luis Suarez could once again be in trouble after appearing to bite an Italian opponent Tuesday in a key World Cup qualifying game. It is the third biting incident involving the talented but controversial striker. The incident, shown on television replays, showed Suarez apparently bite the shoulder of Italy defender Giorgio Chiellini as the pair clashed in the Italian penalty area. It happened about a minute before Uruguay scored in the 81st. Uruguay won 1-0 and qualified for the knockout stages, while four-time champion Italy was eliminated.
Story first published: Wednesday, June 25, 2014, 13:15 [IST]
Other articles published on Jun 25, 2014
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more