For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடுவர்கள், போட்டியாளர்கள் ஷாக்.. கடைசி நொடிகளில்.. தங்கத்தை தட்டிச் சென்ற 17 வயது "சிங்கப்பெண்"

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் பிரிவில் ஒரு ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது எனலாம். ஆம்! யாருமே எதிர்பார்க்காத 17 வயது இளம் பெண் ஒருவர் தங்கப்பதக்கத்தை தட்டித் தூக்கியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதில், breaststroke வகை நீச்சல் பிரிவில் அமெரிக்க வீராங்கனை லில்லி கிங் மெடல் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில், இளம் பெண் லிடியா ஜேகோபி அனைவரையும் ஆச்சர்யப்படுத்திவிட்டார்..

பாய்மரப் படகு போட்டி.. லேசாக சறுக்கிய தமிழ்நாட்டின் நேத்ரா.. 38வது இடத்திற்கு பின் தங்கினார்பாய்மரப் படகு போட்டி.. லேசாக சறுக்கிய தமிழ்நாட்டின் நேத்ரா.. 38வது இடத்திற்கு பின் தங்கினார்

 17 வயது

17 வயது

பெண்களுக்கான 100-meter breaststroke நீச்சல் பிரிவில், கலந்து கொண்ட 17 வயதே ஆன லிடியா ஜேகோபி, தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். உண்மையில், இந்த பிரிவில், மற்றொரு அமெரிக்க வீராங்கனையான லில்லி கிங் தான் ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் தனது 2வது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

 தங்கப்பதக்கம்

தங்கப்பதக்கம்

இந்த போட்டியில் முதலில் சற்று பின்தங்கிய லிடியா, கடைசி 50 மீட்டரில் அபாரமான வேகம் காட்டி, 1 நிமிடம் 4.95 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்று அசத்தினார். லில்லிக்கு வெள்ளிப்பதக்கமும் கிடைக்கவில்லை. தென் ஆப்பிரிக்காவின் தத்யானா ஷூன்மாக்கர் என்ற வீராங்கனை வெள்ளி வென்றார். லில்லிக்கு வெண்கலம் கிடைத்தது. எனினும், இது ஒலிம்பிக்கில் இவரது 3வது பதக்கமாகும்.

 எதிர்பார்க்கல

எதிர்பார்க்கல

தங்கம் வென்ற லிடியா கூறுகையில், "நான் உண்மையில் பதக்கத்தை குறிவைத்தே எனது வேகத்தை கூட்டினேன். ஆனால் தங்கம் வெல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. பெயர்ப்பட்டியலில் என்னுடைய பெயர் முதலில் இருந்ததை பார்த்த போது, நான் நம்பவே இல்லை" என்றார்.

 மகிழ்ச்சி

மகிழ்ச்சி

அதேபோல், வெண்கலம் வென்ற லில்லி கூறுகையில், "நான் ஆச்சரியப்படுகிறேன். என் செயல்பாட்டை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். லிடியா போன்ற எதிர்கால வீராங்கனைகள் உருவாதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினார். ஆனால், பாருங்க.. ஒரே போட்டி தான். ஆனால் ரெண்டு மெடலை வாங்கிவிட்டது அமெரிக்கா. இதுபோன்ற ஒரு பலமான கட்டமைப்பு தான் இந்தியாவுக்கு தேவை. ஆளுமை செலுத்தணும். ஒரு போட்டியில், ஒருத்தர் விட்டா, இன்னொருத்தர் அடிக்கணும். அதுதான் இங்கு முக்கியம்.

Story first published: Tuesday, July 27, 2021, 15:48 [IST]
Other articles published on Jul 27, 2021
English summary
US teen Lydia Jacoby wins gold medal in - லிடியா ஜாகோபி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X