For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வருஷத்துக்கு இவ்ளோதான்.. இனி ஓட மாட்டேன்... உசேன் போல்ட்

பெய்ஜிங்: 2015ம் ஆண்டு சீசனை சற்று முன் கூட்டியே முடித்து விட்டார் உலகின் அதிவேக மனிதர் என்ற பெருமை பெற்ற உசேன் போல்ட். 2016 ஒலிம்பிக் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக முன் கூட்டியே இந்த ஆண்டு சீசனை அவர் முடித்துள்ளார்.

உலகின் அதி வேக மனிதர் என்ற பெருமை பெற்றவர் பிரபல தடகள வீரர் உசேன் போல்ட்.

உலகிலேயே அதிகவேகமாக ஓடக்கூடியவர் என்பதை மீண்டும் சீனாவில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்று நிரூபித்தார் உசைன் போல்ட்.

காயத்தால் சிகிச்சை:

காயத்தால் சிகிச்சை:

அத்துடன் 200 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்க பதக்கம் வென்றார். இந்த போட்டிக்கு முன் காயம் காரணமாக சிகிச்சை மேற்கொண்டார் உசைன் போல்ட்.

திறமையான ஆட்டம்:

திறமையான ஆட்டம்:

இதனால் அவர் மீண்டும் ஜொலிப்பாரா என்ற கேள்வி எழும்பியது. ஆனால், திறமையாக செயல்பட்டு வெற்றி வாகை சூடினார்.

இனிமேல் ஓடுவதில்லை:

இனிமேல் ஓடுவதில்லை:

இந்நிலையில் இந்த ஆண்டு இதற்குமேல் ஓடமாட்டேன் என்று உசைன் போல்ட் கூறியுள்ளார். இதுகுறித்து உசைன் போல்ட் தனது பேஸ்புக் பக்கத்தில் ‘‘சமீபத்தில் மகிழ்ச்சியளித்த சீனாவில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு இந்த வருடம் எந்த போட்டியிலும் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டி:

ஒலிம்பிக் போட்டி:

2016 ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகும் வகையில் முன்கூட்டியே தனது போட்டிகளை உசேன் போல்ட் முடித்துள்ளாராம்.

Story first published: Tuesday, September 8, 2015, 12:37 [IST]
Other articles published on Sep 8, 2015
English summary
Six-time Olympic champion Usain Bolt will miss the Diamond League final in Brussels on Friday after deciding to end his 2015 season early.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X