சிறந்த தடகள வீரர்.. 6வது முறையாக விருது பெற்ற உசேன் போல்ட்

மோனாகோ: சர்வதேச தடகள சம்மேளனத்தின் 2016-ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றுள்ளார் புகழ்பெற்ற தடகள வீரர் உசேன் போல்ட். இந்த விருதை அவர் 6-வது முறையாகப் பெறுகிறார்.

சர்வதேச தடகள சம்மேளனத்தின் சிறந்த வீரருக்கான விருதை 2008, 2009, 2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் பெற்றுள்ளார் போல்ட்.

2008 முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் போல்ட் 100 மீ. ஓட்டத்தில் 3 தங்கம், 200 மீ. ஓட்டத்தில் 3 தங்கம், 100 மீ. தொடர் ஓட்டத்தில் 3 தங்கம் என மொத்தம் 9 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்தச் சாதனை ஒலிம்பிக் வரலாற்றில் உடைக்க முடியாத ஒன்றாக அமையும். மேற்கண்ட 3 போட்டிகளிலுமே உலக சாதனையும் போல்ட் வசமேயுள்ளது. இதில் மகளிருக்கான விருது தடகள வீராங்கனை அல்மஸ் அயனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

6 கண்டங்களைச் சேர்ந்த நிபுணர்கள் தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 வீரர்களையும், 10 வீராங்கனைகளையும் தேர்வு செய்து வெளியிட்டுள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Monaco:This week marks the opening of the voting process for the 2016 World Athletes of the Year ahead of the IAAF Athletics Awards 2016 in Monaco on Friday 2 December.
Story first published: Saturday, December 3, 2016, 17:59 [IST]
Other articles published on Dec 3, 2016
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X