"சீட்டிங்" கிடக்குது... காதலியுடன் ஜாலியாக "அவுட்டிங்" கிளம்பினார் போல்ட்! #usainbolt #KasiB

By Sutha

புளோரிடா: ரியோ ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக முடித்து விட்டு வெற்றிகரமாக திரும்பிய உலகின் மின்னல் வீரர் உசேன் போல்ட், சரமாரியாக சர்ச்சைகளில் சிக்கினார். எல்லாம் பெண் விவகாரங்கள்தான். ஆனால் தற்போது எல்லாவற்றையும் தாண்டி வந்து தனது காதலியுடன் ஜாலியாக சுற்றுலா போயுள்ளார்.

உசேன் போல்ட் லீலைகள் குறித்து தினசரி செய்திகள் வெளியாகி கதி கலங்க வைத்த வைத்தன. ஓவர் நைட்டில் "அப்பாவி" உசேன் போல்ட் அனைவரின் கண்களுக்கும் "அடப்பாவி"யாக மாறிப் போனார்.

ஆனால் அவரது காதலி காசி பென்னட் இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. கருத்தும் சொல்லவில்லை. மாறாக, சுய ஒழுக்கம் அவசியம் என்று மட்டும் பொத்தாம் பொதுவாக ஒரு டிவிட் போட்டார்.

பெண்களுடன் கும்மாளம்

பெண்களுடன் கும்மாளம்

ரியோ ஒலிம்பிக்கிலிருந்து திரும்பிய உசேன் போல்ட் குறித்து சரமாரியாக செய்திகள் வெளியாகின. ரியோவிலேயே அவர் பெண்களுடன் அட்டகாசம் செய்த செய்தியும் புகைப்படங்களுடன் வெளியாகின.

20 வயது மாணவியுடன்

20 வயது மாணவியுடன்

ரியோவில் 20 வயது மாணவி ஜாடி டியூரட் என்பவருடன் அவர் அடித்த கொட்டம் குறித்து செய்திகள் வெளியாகின. படமும் வெளியாகியது. மிகவும் நெருக்கமாக இருவரும் இருந்த படம் அது.

லண்டனில் கும்மாளம்

லண்டனில் கும்மாளம்

அதைத் தொடர்ந்து ரியோவிலிருந்து லண்டன் போன உசேன் அங்கு பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தார். அதுகுறித்தும் செய்திகள் வெளியாகின. இரவு நேர பார்ட்டிகளிலும் பெண்களுடன் அமர்க்களப்படுத்தியதாக செய்திகள் வெளியாகின.

ஹாட் செக்ஸ்

ஹாட் செக்ஸ்

பல்வேறு நைட் கிளப்களில் பெண்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம், ஹாட் செக்ஸ் என பொழுதைக் கழித்தார் போல்ட். கிட்டத்தட்ட 10 பெண்களுடன் அவர் லண்டன் பொழுதுகளைக் கழித்ததாக செய்திகள் வெளியாகின.

10 அழகிகளுடன் ஒரே அறையில்

10 அழகிகளுடன் ஒரே அறையில்

மேலும் 10 அழகிகளுடனும் ஒரே அறையில் இரவெல்லாம் கழித்தார் போல்ட் என்றும் ஹோட்டலிலிருந்து செய்திகள் கசிந்தன. இதனால் போலட்டை விட்டு அவரது காதலி பிரிவார் என்று கூட செய்திகள் வந்தன.

கண்டுக்காத காசி

கண்டுக்காத காசி

ஆனால் அவரது காதலி காசி இதையெல்லாம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. மாறாக சுய ஒழுக்கம் அவசியம் என்று மட்டும் அவர் டிவிட் போட்டார். அத்தோடு விட்டு விட்டார்.

காதலியுடன் திடீர் வீடியோ

இந்த நிலையில் திடீரென காதலியுடன் சுற்றுலா கிளம்பியுள்ளார் போல்ட். இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் போட்டுள்ளார். விமான நிலையத்தில் இருவரும் அமர்ந்திருப்பது போல அதில் உள்ளது. இருவரும் சந்தோஷமாக, உற்சாகமாகவும் காணப்படுகின்றனர். இதன் மூலம் இருவரும் சமாதானமாகி விட்டதாக கூறப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Jamaican star runner Usain Bolt takes girlfriend Kasi Bennett on a vacation after cheating scandal. After Rio Olympics got over, Usain was seen partying with different girls daily and having wild nights in Brazil and London. But Kasi Bennett seems to be unaffected by Usain's cheating on her. The couple just headed to a much needed vacation and Usain Bolt posted this video on his snapchat.
Story first published: Sunday, September 4, 2016, 10:39 [IST]
Other articles published on Sep 4, 2016
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more