For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விளையாடவும் செய்யணும்.. சோசியல் டிஸ்டன்சிங்கும் வேணும்.. அடேங்கப்பா.. இது சூப்பர்!

சென்னை: இதோ நம் கண்ணைக் கவர்ந்த இன்னொரு விளையாட்டு.. இது வேற லெவல் சிந்தனையாவும் இருக்கு.. அதுதான் மேட்டர். இப்போது இதுதான் டிவிட்டரிலும் வைரல்.

எல்லா விளையாட்டையும் நிறுத்தியாச்சு. ஏன் டிவியில் ஸ்போர்ட்ஸ் நியூஸ் கூட கம்மியாகி விட்டது. காரணம் மொத்தமாக எல்லாவற்றையும் இழுத்து மூடி விட்டது இந்த கொரோனாவைரஸ். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்போர் விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும்தான்.

ஒலிம்பிக் தள்ளிப் போய் விட்டது. விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன் போட்டிகளும் போயே போச்சு. ஐபிஎல் நடக்குமா நடக்காதான்னு இன்னும் குழம்பிட்டே இருக்காங்க. இப்படி இருக்கையில் எது கிடைத்தாலும் அதைப் பார்த்து ரசிக்கும் மன நிலைக்கு விளையாட்டுப் பிரியர்கள் போய் விட்டார்கள்.

ஒரே ஒரு ஆட்டக்காரர்

ஒரே ஒரு ஆட்டக்காரர்

அப்படி டிவிட்டரில் நாம் ஒரு ரவுண்டு அடித்துக் கொண்டிருந்தபோது இந்த ஆட்டக்காரர் கண்ணில் பட்டார். எந்த அளவுக்கு விளையாட்டுப் பிரியர்கள் ஏங்கிப் போயிருக்காங்கன்னு இவரைப் பார்த்தபோது தெரிந்தது. இது எந்த ஊர் என்று தெரியவில்லை. இந்த நபர் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறார். இவரது விளையாட்டை விட அவர் விளையாடிய விதம்தான் சூப்பர்.

தனி ஒருவன் விளையாட்டு

இவர் மட்டும்தான் விளையாடுகிறார். கூட யாரும் இல்லை. கையில் டென்னிஸ் ராக்கெட் இருக்கிறது. பந்தை அடித்து விளையாடுகிறார். இதில் விசேஷம் என்னென்னா அந்தப் பந்தை ஒரு நீளமான கயிற்றில் கட்டி இருக்கிறார். இதனால் பந்து எங்கேயும் போகாது. இவரிடமே திரும்பத் திரும்ப வரும். அதாவது எதிர்முனையில் இன்னொரு வீரர் இருந்தால் எப்படி பந்து திரும்ப வருமோ அதே போல.. ஆடியது போலவும் ஆச்சு.. கூடவே சோசியல் டிஸ்டன்சையும் காப்பாற்றியது போல ஆச்சு.

வீட்டுக்குள் ஆடினால் நல்லது

வீட்டுக்குள் ஆடினால் நல்லது

அந்த தெருவிலும் யாரும் இல்லை. எனவே நோய்த் தொற்று பரவுமோ என்ற அச்சமும் இல்லை. உண்மையிலேயே இது செம ஐடியாதான். அதேசமயம், இதை தெருவில் விளையாடுவதால் ஏதாவது ரிஸ்க் ஆகி விடும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே இதை மொட்டை மாடியில் அல்லது வீட்டுக்குப் பின்னால் வளாகம் இருந்தால் விளையாடலம்.. அது இன்னும் நல்லாருக்கும்.

இவரை தாராளமாக பாராட்டலாம்

இவரை தாராளமாக பாராட்டலாம்

இந்த நபரை உண்மையில் பாராட்ட வேண்டும். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் ஏற்படும் மன வெறுமையை விரட்ட இந்த விளையாட்டு உத்தி நிச்சயம் உதவும். இதே பாணியை பிறரும் கூட கடைப்பிடிக்கலாம். நோய்த் தொற்று அபாயமும் இல்லாமல், பாதுகாப்பாகவும் விளையாடியது போல இருக்கும். மனசுக்கும், உடம்புக்கும் நல்ல புத்துணர்ச்சியும் கிடைக்கும். நல்ல ஐடியாக்காரர்தான் போல இந்த அய்யாச்சாமி!

Story first published: Sunday, April 5, 2020, 15:31 [IST]
Other articles published on Apr 5, 2020
English summary
This is a very novel sport, which was found in a street in Twitter
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X