For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

8வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் குத்துச் சண்டை வீரர் விஜேந்தர்சிங்

டெல்லியில் நடைபெற்ற ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் ஷிப் பட்டத்தைக் கைப்பற்றினார் விஜேந்தர்சிங்.

டெல்லி: டெல்லியின் இரவு நடைபெற்ற ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் ஷிப் சாம்பியன் பட்டத்தைக் இந்திய குத்துச் சண்டை வீரர் வீஜேந்தர் சிங் கைப்பற்றினார்.

இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இவர் தொழில் முறை போட்டிக்கு மாறி விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் ஷிப் பட்டத்திற்கான போட்டி நேற்று இரவு டெல்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தில் நடைபெற்றது.

Vijender Singh wins Championship

தான்சானியா நாட்டைச் சேர்ந்த பிரான்ஸ் செகாவை எதிர் கொண்டார் விஜேந்தர் சிங். தொழில் முறைப் போட்டியில் தொடர்ந்து 7 முறை வென்ற விஜேந்தர் சிங் 8வது வெற்றியாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். செகாவை நாக்அவுட் செய்வேன் என்று விஜேந்தர் சிங் ஏற்கனவே சவால் விடுத்திருந்தபடி வெற்றி கைப்பற்றியுள்ளார்.

Vijender Singh wins Championship

ஆஸ்திரேலிய குத்துச் சண்டை வீரர் கெர்ரி ஹோப்பை எதிர்கொண்டு விஜேந்தர் சிங் முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இதே தியாகராஜ் மைதானம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 18, 2016, 11:00 [IST]
Other articles published on Dec 18, 2016
English summary
Vijender Singh won Asia Pacific Super-Meddleweight title in Thyagaraj Stadium in New Delhi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X