அதைப் பார்க்கத்தான் மரத்துக்கு மேலே ஏறி இருக்கீங்களா? கோலியை கலாய்த்த முன்னாள் வீரர்!

மும்பை : இந்திய அணி கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் தான் மரத்தின் மேலே ஏறி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இர்பான் பதான் அந்த புகைப்படம் குறித்து கிண்டலாக கமெண்ட் போட்டுள்ளார்.

டெஸ்ட்ல 500 விக்கெட்டுகளை எடுக்கறது ஜோக் இல்ல.. யுவராஜ்சிங் பாராட்டு

வீட்டில் முடக்கம்

வீட்டில் முடக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். சில வீரர்கள் தங்கள் அருகாமையில் இருக்கும் இடங்களில் பயிற்சிகளை துவக்கி உள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி பயிற்சி செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.

கோலி நிலை

கோலி நிலை

மும்பையில் வசித்து வருகிறார் விராட் கோலி. அங்கே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் அவரால் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை உள்ளது. அதனால் விராட் கோலி வீட்டிலேயே தங்கி உள்ளார்.

மரத்தின் மீது கோலி

மரத்தின் மீது கோலி

சமூக வலைதளங்கள் மூலம் பேட்டி அளித்து வருகிறார். சமீபத்தில் அவர் ட்விட்டரில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ஒரு மரத்தின் மேலே ஏறி நின்று கீழே பார்த்துக் கொண்டு இருந்தார் விராட் கோலி.

த்ரோபேக் புகைப்படம்

த்ரோபேக் புகைப்படம்

த்ரோபேக் புகைப்படம் என அதை குறிப்பிட்டு, ஒரு மரத்தில் ஏறி ஓய்வெடுப்பது எத்தனை மகிழ்ச்சிகரமானது என கூறி இருந்தார் விராட் கோலி. அதை ரசிகர்கள் அதிகம் லைக் செய்து, பகிர்ந்து வந்தனர். அதன் கீழ் முன்னாள் வீரர் இர்பான் பதானும் கமெண்ட் செய்து இருந்தார்.

பதான் கேள்வி

பதான் கேள்வி

இர்பான் பதான், என்ன கீழே மேட்ச் பார்க்க முயன்று கொண்டு இருக்கிறீர்களா? என கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளின் போது சில ரசிகர்கள் மரத்தின் மீது அமர்ந்து போட்டியை காண்பார்கள். அதை சுட்டிக் காட்டித் தான் கோலியை கிண்டல் அடித்துள்ளார் பதான்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat Kohli posted a picture and Irfan Pathan asks a funny question to the captain.
Story first published: Wednesday, July 29, 2020, 19:18 [IST]
Other articles published on Jul 29, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X