For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மரத்துல ஏறி இயற்கையை ரசிச்சதெல்லாம்... விராட் கோலி பரவசம்

மும்பை : எப்போதும் சுறுசுறுப்புடன் உற்சாகமாக இருப்பவர் கேப்டன் விராட் கோலி. சமூக வலைதளத்திலும் பரபரப்புடன் காணப்படுபவர்.

இவர் தற்போது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் ஒரு மரத்தில் ஏறி அதன் கிளையில் அமர்ந்துக் கொண்டிருக்கிறார் விராட். மரத்தில் ஏறி இயற்கையை ரசித்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார் அந்த பதிவில்.

இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளின் 3வது டெஸ்ட் போட்டி.. மிதமான வேகத்தில் மே.இ.தீவுகள் ஆட்டம் இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளின் 3வது டெஸ்ட் போட்டி.. மிதமான வேகத்தில் மே.இ.தீவுகள் ஆட்டம்

சமூகவலைதளங்களில் பரபர

சமூகவலைதளங்களில் பரபர

எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்படும் விராட் கோலி சமூக வலைதளங்களிலும் மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறார். சாதாரணமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் ஷேரிங்குகளையும் அதிகமாக அள்ளுகிறது. மேலும் இந்த லாக்டவுன் சமயத்தில் பல்வேறு ஆன்லைன் சாட் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

மாற்றத்திற்கு காரணம் என பாராட்டு

மாற்றத்திற்கு காரணம் என பாராட்டு

சமீபத்தில் இவ்வாறு மயங்க் அகர்வாலுடன் அவர் இணைந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தன்னுடைய சிறப்பான மாற்றத்திற்கு காரணமாக தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவை கைகாட்டியிருந்தார். அவரை சந்தித்திருக்காவிட்டால் மிகவும் இறுக்கமான தான், இத்தகைய சிறப்பான நிலையை அடைந்திருக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

மரத்தில் கிளையில் மகிழ்ச்சி

மரத்தில் கிளையில் மகிழ்ச்சி

இந்நிலையில் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் கோலி. அதில் உயரமான மரத்தில் ஏறி அதன் கிளை ஒன்றில் அமர்ந்திருக்கிறார். மேலும் மரத்தில் ஏறி இயற்கையை என்ஜாய் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மிகவும் அழகான அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிகமான லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அளித்துள்ளனர்.

செப்டம்பர் 19ல் துவக்கம்

செப்டம்பர் 19ல் துவக்கம்

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியிருந்த விராட் கோலி, வரும் செப்டம்பர் 19ம் தேதி யூஏஇயில் துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். இதுவரை 177 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள விராட் கோலி அதிகமான ரன்களை அதாவது 5,412 ரன்களை குவித்துள்ளார்.

Story first published: Wednesday, July 29, 2020, 16:33 [IST]
Other articles published on Jul 29, 2020
English summary
Virat Kohli recalled the time when he could "climb up a tree and chill"
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X