டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டி - இளம் வீரரிடம் திணறிய விஸ்வநாதன் ஆனந்த்

விஜ்க் ஆன் ஸீ : நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியின் ஆறாவது ரவுண்டில் 20 வயதேயான நெதர்லாந்து வீரர் ஜோர்டன் வான் பாரஸ்டிடம் மோதிய ஆனந்த், மிகுந்த பிரயத்தனப்பட்டு போட்டியை சமன் செய்தார்.

ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ள இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், இந்த தொடரில் இதுவரை மோதிய 6 போட்டிகளில் 3 புள்ளிகளை பெற்று 6வது இடத்தில் உள்ளார்.

இந்திய வீரர்கள் சூர்ய சேகர் கங்குலி மற்றும் நிஹால் சரின் ஆகியோரும் தங்களது போட்டிகளை டிரா செய்துள்ளனர்.

பெருமைக்குரிய விஸ்வநாதன் ஆனந்த்

பெருமைக்குரிய விஸ்வநாதன் ஆனந்த்

ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் பெருமைக்குரிய அங்கமாக பார்க்கப்படுகிறார்.

போட்டியை டிரா செய்த ஆனந்த்

போட்டியை டிரா செய்த ஆனந்த்

இந்நிலையில் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஸீயில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்று விஸ்வநாதன் ஆனந்த் ஆடி வருகிறார்.

6வது இடத்தில் ஆனந்த்

6வது இடத்தில் ஆனந்த்

இந்தப் போட்டியில் 6 போட்டிகளில் பங்கேற்ற ஆனந்த், ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6 போட்டிகளில் பங்கேற்று 3 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் உள்ளார் ஆனந்த்.

நெதர்லாந்து வீரருடன் போட்டி சமன்

நெதர்லாந்து வீரருடன் போட்டி சமன்

இந்நிலையில் 6வது போட்டியில் நெதர்லாந்தின் 20 வயதான இளம் வீரர் ஜோர்டன் வான் பாரஸ்டுடன் போட்டியிட்ட விஸ்வநாதன் நீண்ட திணறலுக்கு பின்பு ஆட்டத்தை சமன் செய்தார்.

போட்டியை சமன் செய்த வீரர்கள்

போட்டியை சமன் செய்த வீரர்கள்

இதேபோல சேலஞ்சர்ஸ் சுற்றில் இந்திய வீரர்கள் சூர்ய சேகர் கங்குலி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிராண்ட்மாஸ்டர் ஜேன் ஸ்மீட்ஸ் உடனான போட்டியையும் உஸ்பெஸ்கிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசத்தரோவ்வுடன் மோதி நிஹால் சரினும் தங்களது போட்டிகளை சமன் செய்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
World Chess Champion Viswanathan anand draws 6th round in Tata Steel masters
Story first published: Sunday, January 19, 2020, 19:03 [IST]
Other articles published on Jan 19, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X