For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிரெயினிங்க்காக எல்லாம் காரை விக்கல... மெயின்டெயின் பண்ண முடியலப்பா... டூட்டி சந்த் விளக்கம்

டெல்லி : டிரெயினிங் காரணமாகவோ வாழ்வாதாரத்திற்காகவோ தன்னுடைய விலைமிகுந்த பிஎம்டபள்யூ காரை விற்கவில்லை என்று தடகள வீராங்கனை டூட்டி சந்த் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Ben Stokes smokes cigarette in 2019 wc final

சில தினங்களுக்கு முன்னால் தன்னுடைய சொகுசு காரை விற்கவுள்ளதாக சமூக வலைதளம் மூலம் டூட்டி சந்த் தெரிவித்திருந்தார்.

இந்த பதிவு, பல விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. அவர் தன்னுடைய டிரெயினிங்கிற்காகவே காரை விற்பதாக பலர் தெரிவித்திருந்தனர்.

முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்

சொகுசு கார் விவகாரம்

சொகுசு கார் விவகாரம்

ஓட்டப்பந்தய வீராங்கனையான டூட்டி சந்த் இந்தியா சார்பில் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த 2014ல் காமென்வெல்த் போட்டிகளில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் பாலின சர்ச்சையில் சிக்கி சர்வதேச தடகள கூட்டமைப்பால் 2 ஆண்டுகள் தடை பெற்றிருந்தார். இதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்ட அவர் தடை நீக்கம் பெற்றார்.

டிரெயினிங்கிற்காக விற்பதாக விமர்சனம்

டிரெயினிங்கிற்காக விற்பதாக விமர்சனம்

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பிஎம்டபள்யூ காரை விற்கவுள்ளதாக டூட்டி சந்த் சமூகவலைதளம் மூலம் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்படுவதாகவும், தன்னுடைய டிரெயினிங்கிற்காக தான் தன்னுடைய காரை விற்கிறார் என்றும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

மெயின்டெயின் பண்ண முடியவில்லை

மெயின்டெயின் பண்ண முடியவில்லை

இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு டூட்டி சந்த் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய சொகுசு காரை தன்னால் மெயின்டெயின் பண்ண முடியாத காரணத்தால்தான் தான் விற்பதாகவும், கொரோனா வைரஸ் ஊரடங்கால் அதை ஓட்ட முடியவில்லை என்றும் அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தின் மூலம் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

டிரெயினிங்கிற்காக அதிக பணம்

டிரெயினிங்கிற்காக அதிக பணம்

மேலும் ஒடிசா அரசும் கேஐஐடி பல்கலைகழகமும் தன்னிடம் முழு ஆதரவுடன் செயல்பட்டு வருவதாகவும் தன்னுடைய டிரெயினிங்கிற்காக குறிப்பாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்காக அதிக நிதி செலவழிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் ஒடிசா அரசு தனக்கு தேவையான டிரெயினிங்கை எந்த தயக்கமும் இன்றி உடனடியாக செலவழிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Story first published: Thursday, July 16, 2020, 14:30 [IST]
Other articles published on Jul 16, 2020
English summary
I never expressed that I am selling my car to fund my training -Dutee
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X