For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நன்றி மறக்காத மீராபாய்.. வெற்றிக்கு பிறகு போட்ட ட்வீட்.. குவியும் பாராட்டு.. அப்படி என்ன கூறினார்?

ஜப்பான்: ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றது குறித்து இந்திய வீராங்கனை மீராபாய் மனம் திறந்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கின் இன்றைய போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி கிடைத்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளார் மீரா பாய்.

தோனிக்கும் - மீராபாய்-க்கும் உள்ள ஒற்றுமை.. விரகு வெட்டியது முதல் ஒலிம்பிக் வரை..வியப்பூட்டும் பயணம்தோனிக்கும் - மீராபாய்-க்கும் உள்ள ஒற்றுமை.. விரகு வெட்டியது முதல் ஒலிம்பிக் வரை..வியப்பூட்டும் பயணம்

ஒலிம்பிக் பதக்கம்

ஒலிம்பிக் பதக்கம்

இந்த போட்டியில் 49 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற மீரா பாய், ஒட்டுமொத்தமாக 202 கிலோ எடையை தூக்கி அசத்தினார். ஸ்நாட்ச் பிரிவில் இவர் 87 கிலோவும் க்ளீன் அண்டு ஜெர்க் முறையில் 115 கிலோவும் அவர் தூக்கியிருந்தார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனது முதல் பதக்கத்தை( வெள்ளிப்பதக்கம்) மீரா பாய் தட்டிச்சென்றார்.

ட்வீட்

ட்வீட்

இந்நிலையில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றது குறித்து மீராபாய் மனம் திறந்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், எனது நீண்ட நாள் கனவு இன்று நிஜமானதாக கருதுகிறேன். இந்த பதக்கத்தை இந்தியாவுக்காக சமர்பிக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நன்றி கூறவும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

தியாகங்கள்

தியாகங்கள்

என் குடும்பத்தினருக்கு நான் ஸ்பெஷல் நன்றிகளை தெரிவித்தே ஆக வேண்டும். என்னை நம்பி எனது தாய் பல தியாகங்களை செய்துள்ளார். அவர் எனக்காக செய்த அனைத்து விஷயங்களும் மிகப்பெரியவை. நான் மணிப்பூரை சேர்ந்தவள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சொந்தமானவள். எனவே நாட்டிற்காக பதக்கம் வென்றதில் பெருமை படுகிறேன்.

நன்றி

நன்றி

எனது வெற்றிக்காக பாடுபட்ட இந்திய அரசாங்கம், விளையாட்டு துறை அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் கமிட்டி, பளுதூக்கு கமிட்டி, இந்திய ரயில்வே துறை, ஸ்பான்ஸர்கள், உதவி செய்தவர்கள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். என்னுடைய பயணத்தில் நீங்கள் முக்கிய பங்கு வகித்தீர்கள். இதே போல எனது பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கு மிகப்பெரிய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை கடும் முயற்சி, ஊக்கமான பேச்சுக்கள் மூலம் சிறப்பாக செயல்படவைத்தவர் அவர் என மீராபாய் கூறியுள்ளார்.

Story first published: Saturday, July 24, 2021, 21:13 [IST]
Other articles published on Jul 24, 2021
English summary
Weightlifter Mirabai Chanu dedicates Tokyo Olympics silver medal to country, said dream come true
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X