For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனசு ஒரு மொபைல் ஆப் போல... தேவையற்றவற்றை அன்இன்ஸ்டால் செய்யுங்க

சென்னை : கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் விளையாட்டுக்கள் அனைத்தும் ஏறக்குறைய தள்ளிவைக்கப்பட்டுள்ளன. வீரர்களும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த நெருக்கடியான சூழலில் மனதை வெற்றி கொள்வதே முதல் மற்றும் முக்கியமான விஷயம் என்று மனவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டு வீரர்கள் தங்களது உடல் மற்றும் மனதை சிறப்பாக வைத்துக் கொள்ள ஐந்து புலன்களையும் சிறப்பாக பேண வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நெருக்கடியில் விளையாட்டு வீரர்கள்

நெருக்கடியில் விளையாட்டு வீரர்கள்

சர்வதேச அளவில் கொரோனாவால் 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல துறையினரும் குறிப்பாக விளையாட்டுத் துறையினர் முடங்கியுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்டவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் மனநெருக்கடிக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நிபுணர்கள் ஆலோசனை

நிபுணர்கள் ஆலோசனை

கொரோனாவால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு எவ்வாறு தொடரும் என்பது தெரியாத நிலையில், இந்த நெருக்கடியான சூழலில் தங்களது மனதை வெற்றி கொள்வது மிகவும் அவசியம் என்று இந்திய ஹாக்கி அணியின் உளவியல் நிபுணர் மிரிணாள் சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார். மனது ஒரு மொபைல் ஆப் போல என்றும் அவ்வப்போது தேவையற்றவற்றை செயலிழக்க செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேர மாற்றங்கள் பலனளிக்காது

நேர மாற்றங்கள் பலனளிக்காது

தங்களுடைய பயிற்சி உள்ளிட்ட பழக்கங்களை தொடர்ந்து வீரர்கள் நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று கொல்கத்தாவை சேர்ந்த மனவியல் ஆலோசகர் கூறியுள்ளார். தன்னுடைய மாணவர்களுக்கு பேஸ்புக் மூலம் தான் தொடர்ந்து காலை 5.55 மணிக்கு பாடங்களை துவங்குவதாகவும் இதன்மூலம் அவர்களுக்கு தங்களின் பயிற்சி மாறாமல் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கரண்பீர் சிங் மேற்கோள்

கரண்பீர் சிங் மேற்கோள்

ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் மைக்கேல் பெல்ப்ஸ், இயான் தோர்ப், கிரிக்கெட் வீரர் மார்கஸ் ட்ரெஸ்கோதிக் போன்றவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு பின்பு நிபுணர்களின் ஆலோசனையுடன் அதிலிருந்து வெளிவந்தவர்கள்தான் என்று மனவியல் ஆலோசகர் கரண்பீர் சிங் மேற்கோள் காட்டியுள்ளார்.

5 புலன்களை சீராக பராமரிக்க வேண்டும்

5 புலன்களை சீராக பராமரிக்க வேண்டும்

கொரோனா ஊடரங்கு நிலை சீராகும்வரையில் மனநெருக்கடி உள்ளிட்டவற்றை சீராக பராமரிக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் மற்றும் நரேன் கார்த்திகேயன் ஆகியோருக்கு ஆலோசகராக உள்ள கே. கோபிநாத் கூறியுள்ளார். இதற்கு ஐந்து புலன்களையும் சீராக பராமரிப்பதன்மூலம் மனதையும் சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Monday, April 20, 2020, 13:52 [IST]
Other articles published on Apr 20, 2020
English summary
Mind is like a Mobile App, Uninstall uninstall when you don't -Chakraborty
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X