For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனைவிக்கு ஒலிம்பிக்கில் "தங்கம்".. கணவருக்கு "ஆஸ்கர்" - நெகிழ வைக்கும் ஓரினச்சேர்க்கையாளர் தம்பதி

டோக்கியோ: எத்தனையோ போராட்டங்கள், அவமதிப்புகளுக்கு பிறகு தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் ஓரினச்சேர்க்கையாளர் டாம் டேலே.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது என்பதே பல விளையாட்டு வீரர்களின் கனவு. அப்படி கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தாலே, அதனை தங்கள் விளையாட்டு வாழ்க்கையின் மாபெரும் சாதனையாக கருதுகின்றனர்.

அப்படி ஒருவர் ஒலிம்பிக்கில் மீண்டும் மீண்டும் பங்கெடுத்து, நிறைவேறாத தனது தங்க வேட்டை கனவை நிஜமாக்கியிருக்கிறார். விஷயம் அதுமட்டுமல்ல.. ஓர் ஓரினச்சேர்க்கையாளராக இருந்து சாதித்திருக்கிறார்.

நீச்சல் போட்டி: அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டார் சாஜன் பிரகாஷ்.. எனினும் பதக்கம் வெல்ல மற்றொரு வழி!நீச்சல் போட்டி: அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டார் சாஜன் பிரகாஷ்.. எனினும் பதக்கம் வெல்ல மற்றொரு வழி!

 2008 முதல்

2008 முதல்

ஆம்! கடந்த 2008 முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறார் பிரிட்டனைச் சேர்ந்த டாம் டேலே. டைவிங் வீரரான டாம் 2008 மற்றும் 2012 ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவர். ஆனால், தங்கம் வெல்ல வேண்டும் என்பதே இவரது ஒரே குறிக்கோள். இவர் 2008ல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற போது இவரது வயது வெறும் 14 தான். ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற மிக இள வயது வீரர் எனும் சாதனையை இன்னும் தன் வசம் வைத்திருக்கிறார்.

 brain tumour

brain tumour

ஆனால், இவரது தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. இவர் அதிகம் நேசித்த இவரது தந்தை ராபர்ட், brain tumour காரணமாக, கடந்த 2011ம் ஆண்டு காலமானார். அதன்பிறகு கடினமாக மாறிய இவரது வாழ்க்கையில், தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பதை அவர் மெல்ல மெல்ல உணரத் தொடங்கினார்.

 மில்க்

மில்க்

பிறகு, டஸ்டின் லான்ஸ பிளாக் என்பவரை எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் டாம் டேலே. பிளாக் ஒரு ஆஸ்கர் விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் LGBTQ + ஆர்வலர் ஆவார். அமெரிக்க வாழ்க்கை வரலாற்று திரைப்படமான "மில்க்" இல் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர்.

உத்வேகம்

உத்வேகம்

அதாவது, டாம் டேலே மனைவியாகவும், பிளாக் கணவராகவும் திருமண வாழ்க்கையில் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டாம், "நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதிலும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஓரினச் சேர்க்கையாளர் என்பதை நினைத்தும் பெருமை கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இவருடைய இந்த வெற்றி, சமூகத்தில் தனித்து விடப்படும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பெரும் உத்வேகமாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். தங்களாலும் சாதிக்க முடியும் என்பதை அவர்கள் உணரும் தருணம் இது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, July 27, 2021, 20:06 [IST]
Other articles published on Jul 27, 2021
English summary
Who is olympic gold medalist Tom Daley - டாம் டேலே
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X