For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் போட்டியில்.. ஒவ்வொரு வீரருக்கும் 55 காண்டம்கள்.. அதிக அளவு உடலுறவு.. என்ன காரணம்?

ஜப்பான்: ஒலிம்பிக் போட்டிகளில் ஏன் வீரர்களுக்கு அதிக அளவில் காண்டம்கள் வழங்கப்படுகின்றன தெரியுமா? உண்மையில் ஒரு நல்ல விஷயத்துக்காகவே இதனை கொடுக்கிறார்கள்.

வரும் ஜுலை. 23ம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. கொரோனாவிற்கு இடையே இந்த போட்டிகள் நடக்க உள்ள நிலையில் இதற்காக பல்வேறு புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

 11 ஆண்டுகளுக்கு பிறகு.. இங்கிலாந்து மண்ணில் அசர வைத்த அஷ்வின் சாதனை.. வெளியான 11 ஆண்டுகளுக்கு பிறகு.. இங்கிலாந்து மண்ணில் அசர வைத்த அஷ்வின் சாதனை.. வெளியான

ஜுலை 23 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்க உள்ளன. கடந்த 2020ம் ஆண்டே நடக்கவிருந்த ஒலிம்பிக், போட்டிகள் கொரோனா காரணமாக இந்த வருடம் தள்ளி வைக்கப்பட்டது.

1988 முதல்

1988 முதல்

இந்த நிலையில், மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் இந்த வருடம் ஒலிம்பிக் நடக்க உள்ளது. அது சரி.. ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஏன் வீரர்களுக்கு பாக்கெட் பாக்கெட்டாக காண்டம் கொடுக்கிறார்கள்? என்று பார்க்கலாம். இதில், முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று 1988ல் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் காண்டம் வழங்கப்பட்டு வருகிறது என்பதைத் தான்.

அவர்களுக்கே அதிக காண்டம்

அவர்களுக்கே அதிக காண்டம்

பொதுவாக, தடகள வீரர்களுக்கு தான் அதிக அளவில் ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில், தடகள வீரர்களை போன்ற திடகாத்திரமான ஆட்களுக்கு உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் என்பதாலும், உடலுறவில் ஈடுபடுவது மன அழுத்தம் குறைய உதவும் என்பதாலும் இதுப்போன்ற போட்டி காலங்களில் அதிகளவில் இவர்கள் உடலுறவில் ஈடுபட காரணமாக அமைவதாக கூறப்படுகிறது. ஆனால், தடகள போட்டிகள் மற்றும் பளுதூக்கும் போட்டிகளில் பங்குபெறும் போட்டியாளர்கள் தான் அதிகம் உடலுறவில் ஈடுபடுவதாக தெரிகிறது.

ஒரு வீரருக்கு 42

ஒரு வீரருக்கு 42

கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது நானூறு அறைகளில் தங்கியிருந்த தடகள வீரர்கள் மொத்தம் நான்கு இலட்சம் காண்டம்கள் பயன்படுத்தியதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. அதேபோல், கடந்த 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது, தடகள வீரர்கள் மொத்தம் நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் காண்டம்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது சராசரியாக ஒவ்வொரு தடகள விளையாட்டு வீரரும் 42 காண்டம்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.

Recommended Video

Condom கிடையாது.. ஆனால் மது கிடைக்கும்.. Tokyo Olympics-ல் புதிய கட்டுப்பாடு
இம்முறை அனுமதி இல்லை

இம்முறை அனுமதி இல்லை

கடந்த, 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தமே இரண்டாயிரம் வீரர், வீராங்கனைகள் தான் பங்கேற்றனர். ஆனால், இவர்களுக்கு ஒரு இலட்சத்து பத்தாயிரம் காண்டம்கள் தரப்பட்டதாக கூறுகிறார்கள். அதவாது, ஒரு நபருக்கு 55 காண்டம்கள். ஆனால், இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், கொரோனா காரணமாக ஆணுறைகளை ஆப்பு வைக்கப்பட்டுவிட்டது வேறு விஷயம். ஆம்! கொரோனா பரவல் காரணமாக டோக்கியோவில் ஒலிம்பிக் ஆட வரும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு காண்டம் அளிக்கப்படாது. வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த முறை காண்டம் வழங்கப்படவில்லை. ஆனால் வீரர்கள் ஜப்பானை விட்டு செல்லும் நாளில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காண்டம் கொடுக்கப்படும். அதே சமயம் வீரர்கள் வெளியே பாரில் மது குடிப்பதை தடுக்கும் வகையில் டோக்கியோவில் ஒலிம்பிக் நடக்கும் ஒலிம்பிக் வில்லேஜுக்குள் மது குடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீரர்கள், வீராங்கனைகள் மது பாட்டிலை வெளியே வாங்கி, உள்ளே தங்கள் அறைக்கு கொண்டு சென்று குடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 12, 2021, 16:28 [IST]
Other articles published on Jul 12, 2021
English summary
why condoms issuing during olympic for players? - ஒலிம்பிக்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X