For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக கோப்பை: ஆக்ரோஷம், சிலிர்ப்பு, கொண்டாட்டங்களின் தொகுப்பு இதுதான்...

By Veera Kumar

ரியோடி ஜெனிரோ: உலகமே எதிர்பார்த்து காத்திருந்த உலக கோப்பை கால்பந்தாட்ட இறுதி போட்டியில் ஜெர்மனி 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது நடந்த சுவாரசியங்கள், ஆக்ரோஷங்கள், கொண்டாட்டங்கள் பற்றிய ஒரு புகைப்பட தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு..

இது எப்படி இருக்கு

இது எப்படி இருக்கு

ஜெர்மனியின் மேசுட் ஒசில், தட்டி கொண்டு வந்த பந்தை, பறந்து வந்து தலையால் தடுத்து அந்தரத்தில் அதை பார்க்கும் அர்ஜென்டினாவின் லூகாஸ் பிஜிலா.

அட்டகாசம் போங்கோ..

அட்டகாசம் போங்கோ..

ஜெர்மனியின் கோல் கம்பத்தை நெருங்கி வந்த அர்ஜென்டினா வீரர் கோன்சலோ ஹிகுயனிடமிருந்து பந்தை லாவகமாக தட்டி பறித்த ஜெர்மனி கோல் கீப்பர் மனுவேல் நெயுர். இந்த மாதிரி அட்டகாசமாக செயல்பட்டதற்காகத்தான் இவருக்கு தங்க கையுறை பரிசு கிடைத்தது.

கோல் வரும், ஆனா வராது..

கோல் வரும், ஆனா வராது..

ஆகா.. என்ன ஆச்சரியம்.. அர்ஜென்டினா நேற்று கோல் போட்டதா என்ன? என்ற சந்தேகம் இந்த படத்தை பார்த்தால் வருவது இயல்பு. உண்மைதான், அர்ஜென்டினாவின் கோன்சலோ ஹிகுயன், ஜெர்மனியின் கோல் கம்பத்துக்குள் பந்தை அடித்தார். ஆனால் அது விதிமுறையை மீறிய ஆப்-சைடு கோலாக அறிவிக்கப்பட்டதால் அது கோல் கணக்கில் வரவில்லை.

பறந்து பறந்து சண்டை போடுவோமில்ல

பறந்து பறந்து சண்டை போடுவோமில்ல

ஜெர்மனி அணியின் கோல் கம்பத்தின் அருகே, அர்ஜென்டினாவின் செர்ஜியோ அகுயேரோ பந்தை கடத்தி வந்து அதை தலையால் தட்டி கோலாக்க முயன்றார். அதை தடுப்பதற்காக, ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசும் தலையால் பந்தை தட்டி வேறு பக்கம் திருப்ப முயன்றார். அப்போது அந்தரத்தில் இருவரும் முட்டிக் கொண்ட காட்சி.

இந்தா போட்டாச்சுல்ல

இந்தா போட்டாச்சுல்ல

இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் ஜெர்மனியின் மரியோ கோட்சே கோல் போட்டுவிட்டு, அதை கொண்டாட ஓடி வரும் சிலிர்ப்பூட்டும் காட்சி.

இது அழுகையில்லை, ஆனந்த கண்ணீர்

இது அழுகையில்லை, ஆனந்த கண்ணீர்

ஜெர்மனி உலக கோப்பையை வென்றதும் அணி வீரர் பாஸ்டியன் கதறி அழுது தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். அதற்காக இப்படியாப்பா தலையை பிய்ச்சிகிட்டு அழுறது?

உலக சாம்பியன்

உலக சாம்பியன்

கால்பந்தாட்ட உலக சாம்பியன்களாக முடிசூட்டிக்கொண்ட ஜெர்மனி, உலகத்தையே வென்ற களிப்புடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் காட்சி.

வான வேடிக்கை

வான வேடிக்கை

உலக கோப்பை போட்டிகள் முடிவுக்கு வந்ததும், வான வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. மரகானா ஸ்டேடியத்தின் பின்னணியில் பூச்சிதறல்களாக ஒளி வண்ணம் வீசி மலரும் பட்டாசுகள்.

நாங்களும் கொண்டாடுவோம்..

நாங்களும் கொண்டாடுவோம்..

கொல்கத்தாவில் இரவு விடிய விடிய விழித்திருந்து கால்பந்தாட்டத்தை பார்த்த ஜெர்மனி ரசிகர்கள், அந்த நாட்டு தேசிய கொடியுடன் வீதியில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

Story first published: Monday, July 14, 2014, 18:27 [IST]
Other articles published on Jul 14, 2014
English summary
Jubilant Germans celebrated in the streets around the world, lighting fireworks, embracing strangers, honking car horns and revelling in their first World Cup win in 24 years.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X