For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனைகள் பட்டியல் - செரீனா, பி.வி.சிந்துவுக்கு எத்தனையாவது இடம்னு தெரியுமா?

வாஷிங்டன் : பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலகம் முழுவதும் 2018ஆம் ஆண்டு அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் செரீனா வில்லியம்ஸ் வழக்கம் போல முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் இந்த பட்டியலின் முதல் பத்து இடங்களில் இருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சிந்து இந்த பட்டியலில் ஏழாம் இடம் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வருடாவருடம் பல வகையான "டாப் 100" பட்டியல்களை அளித்து வருகிறது. அதில் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட அதிக பணம் சம்பாதிக்கும் முதல் நூறு விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் செரீனா, பி.வி.சிந்து, மரியா ஷரபோவா உள்ளிட்ட பிரபலங்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

Worlds top paid female athletes list for 201, P.V.Sindhu in the top 10.

இந்த பட்டியலில் பெரும்பாலும் டென்னிஸ் வீராங்கனைகளே இடம் பெற்றுள்ளனர். முதல் பத்து இடங்களில் எட்டு டென்னிஸ் வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

மற்ற இருவர் பி.வி.சிந்து மற்றும் ஓய்வு பெற்ற ரேஸ் கார் டிரைவர் டேனிகா பேட்ரிக். இதில் இந்தியாவின் பி.வி.சிந்து ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். டேனிகா பேட்ரிக் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

முதல் இடத்தை செரீனா வில்லியம்ஸ் மூன்றாவது ஆண்டாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவர் டென்னிஸ் போட்டியில் கிடைத்த வெற்றிப் பணமாக 43.3 லட்சம் (62,000 டாலர்கள்) மட்டுமே பெற்றுள்ளார். அதே சமயம், விளம்பர ஒப்பந்தம் மூலம் 126 கோடி (18.1 மில்லியன்) சம்பாதித்துள்ளார்.

டென்னிஸ் வீராங்கனைகள் டேன் கரோலின் வோஸ்னியாக்கி இரண்டாம் இடத்தையும் (90.8 கோடி), ஸ்லோஆன் ஸ்டீபன்ஸ் மூன்றாவது இடத்தையும் (78 கோடி) பிடித்துள்ளனர்.

ஸ்பெயினின் கார்பைன் முகுருசா (76.8 கோடி), ரஷ்யாவின் மரியா ஷரபோவா (73.3 கோடி) ஆகியோர் நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் இருக்கின்றனர்.

இந்தியாவின் பி.வி.சிந்து 59.37 கோடி சம்பாதித்து ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் சார்பிலும், பாட்மிண்டன் சார்பிலும் முதல் பத்து இடங்களில் இருக்கும் ஒரே வீராங்கனை சிந்து மட்டுமே.

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்றார் சிந்து. அதன் பின்பு சிந்து இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாட்மிண்டன் தரவரிசையில் தொடர்ந்து முன் வரிசையிலேயே இருந்து வருகிறார்.
இந்த பட்டியலில் செரீனா, மரியா ஷரபோவா, பி.வி.சிந்து ஆகியோர் இந்த ஆண்டில் இதுவரை எந்த பட்டங்களையும் வெல்லவில்லை. எனினும், அவர்கள் அதிக பணம் சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 23, 2018, 8:14 [IST]
Other articles published on Aug 23, 2018
English summary
Worlds top paid female athletes list for 2018 released. Serena, Maria Sharapova, P.V.Sindhu are in the top 10.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X