For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மல்யுத்தம் போட்டியில் பரபரப்பு.. நடுவரை தாக்கிய வீரர்.. வாழ்நாள் தடை விதித்த சம்மேளனம்

டெல்லி: காமன்வெல்த் விளையாட்டில் மல்யுத்த போட்டிகளுக்கான தகுதி சுற்று டெல்லியில் கே.டி.ஜாதவ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 125 கிலோ எடைப் பிரிவுக்கான ஆடவர் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் விமான படையை சேர்ந்த அதிகாரியும், மல்யுத்த வீரருமான சத்தேந்தர் மாலிக் மற்றும் மோகித் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சந்தேந்தர் மாலிக் 3க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

போட்டி முடிய 18 விநாடிகளே எஞ்சி இருந்த நிலையில், சத்தேந்தர் மாலிக்கை டேக் டவுன் என்று முறையை பயன்படுத்தி, மேட்டை அதாவது ஆடுகளத்தை விட்டு மோகித் வெளியே தள்ளினார். டேக் டவுன் செய்ததற்கு 2 புள்ளிகளும், வெளியே தள்ளியதற்கு ஒரு புள்ளியும் நடுவர் வழங்கி இருக்க வேண்டும்.

 மறு ஆய்வு

மறு ஆய்வு

ஆனால் கள நடுவர் விரேந்தர் மாலிக், களத்தை விட்டு வெளியே தள்ளியதற்காக ஒரு புள்ளி மட்டும் வழங்கிவிட்டு, டேக் டவுன் முறைக்கு 2 புள்ளியை தர மறுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மோகித், போட்டி நடுவரிடம் வீடியோ மூலம் ஆய்வு செய்து முடிவு எடுக்க கோரிக்கை விடுத்தார்.

நடுவர் தீர்ப்பு

நடுவர் தீர்ப்பு

மோகித்தின் இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட போட்டி நடுவர், ஜக்பிர் சிங், மறு ஆய்வு செய்ய கூறினார். அப்போது மறு ஆய்வு செய்யம் குழுவில் இருந்த நடுவரும், சந்தேந்தர் மாலிக்கும் ஒரே ஊர் என்பதால், தாம் முடிவு எடுத்தால் நியாயம் இருக்காது என்று கூறி விலகிவிட்டார். இதனையடுத்து வேறு நடுவர் ஆய்வு செய்து, டேக் டவுனுக்கு 2 புள்ளிகளை வழங்க முடிவு எடுத்தனர்.

நடுவர் மீது தாக்குதல்

நடுவர் மீது தாக்குதல்

இதன் மூலம் சத்தேந்தர் மாலிக் , மோகித்தும் 3 புள்ளியில் இருந்தனர். விதிப்படி போட்டி டிராவாகும் போது கடைசி புள்ளியை யார் பெறுகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்படுவார். இதனால் மோகித் வெற்றி பெற்றதாக போட்டி நடுவர் ஜக்பிர் சிங் அறிவித்தார். இதனால் கடுப்பான சந்தேந்தர் மாலிக், நடுவர் ஜக்பிர் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அவரை அறைந்து கீழே தள்ளினார்.

வாழ்நாள் தடை

வாழ்நாள் தடை

இதனால் மைதானமே அதிர்ச்சி அடைந்தது. இதனையடுத்து சந்தேந்தர் சிங் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ள இந்திய மல்யுத்த சம்மேளனம், சத்தேந்தர் மாலிக்pகற்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது. காமன்வெல்த் தகுதி சுற்றில் நடுவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Tuesday, May 17, 2022, 21:02 [IST]
Other articles published on May 17, 2022
English summary
Wrestler satendar malik attacked umpire in commonwealth trials மல்யுத்தம் போட்டியில் பரபரப்பு.. நடுவரை தாக்கிய வீரர்.. வாழ்நாள் தடை விதித்த சம்மேளனம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X