For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வர்றியா.. யாருகிட்ட ஜாஸ்தியா இருக்குன்னு பார்ப்போமா? கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE!

டெல்லி : கொரோனா வைரஸ் மக்கள் இடையே பரவி வருவதால் இந்தியாவில் 21 நாட்கள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு மக்கள் பெரும்பாலும் வீட்டில் முடங்கி உள்ளனர்.

Recommended Video

Cricket and WWE started broadcasting old matches to gain viewership

அதே சமயம், கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகள் தடைபட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவுக்கு கிரிக்கெட் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வந்தன.

கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாததால் கிரிக்கெட் போட்டிகளை மட்டுமே முக்கியமாக ஒளிபரப்பி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி திணறி வந்தது.

எங்க கிட்ட இருக்காரே புல்லட்டு பாண்டி.. அவர் எப்படி.. ஐசிசியை தெறிக்க விட்ட அஸ்வின்!எங்க கிட்ட இருக்காரே புல்லட்டு பாண்டி.. அவர் எப்படி.. ஐசிசியை தெறிக்க விட்ட அஸ்வின்!

ஒளிபரப்பில் சிக்கல்

ஒளிபரப்பில் சிக்கல்

மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நீண்ட கால இடைவெளியில் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாததால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சிக்கலில் இருந்தது. அதற்கு ஒரு முக்கிய காரணம் 2020 ஐபிஎல் தொடர்.

ஐபிஎல் ஆதிக்கம்

ஐபிஎல் ஆதிக்கம்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. எப்போதும் ஐபிஎல் தொடர் நடக்கும் போது பிற நாடுகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காது. அதனால், ஐபிஎல் போட்டிகளை மட்டுமே முழுமையாக ஒளிபரப்பவும், ரசிகர்கள் அந்த தொடரை மட்டுமே அதிக அளவில் பார்க்கவும் வாய்ப்பு ஏற்படும்.

பழைய போட்டிகள்

பழைய போட்டிகள்

ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தள்ளிப் போனதால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சிக்கலில் இருந்தது. மக்களை ஈர்க்க பழைய போட்டிகளை ஒளிபரப்பத் துவங்கியது அதிலும் சிறந்த போட்டிகளை ஒளிபரப்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

2011 உலகக்கோப்பை தொடர்

2011 உலகக்கோப்பை தொடர்

இந்த நிலையில், 2011 உலகக்கோப்பை தொடரை வென்று 9 ஆண்டுகள் ஆன ஏப்ரல் 2ஆம் தேதியை கொண்டாடும் வகையில் அதற்கு முன் தினம் இந்தியா - பாகிஸ்தான் போட்டியையும், ஏப்ரல் 2 அன்று இந்தியா - இலங்கை போட்டியையும் ஒளிபரப்பியது. அது பெரிய அளவில் பலன் அளித்தது.

WWE நிகழ்ச்சிகள்

WWE நிகழ்ச்சிகள்

மறுபுறம், WWE ரசிகர்கள் இல்லாத அரங்கில் தொடர்ந்து புதிய நிகழ்ச்சிகளை நடத்தி ஒளிபரப்பி வந்தது. இந்தியாவில் சோனி டென் தொலைக்காட்சி WWE நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தது. இந்த லாக்டவுனால் கிரிக்கெட் போட்டிகள் நடக்காததை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டது அந்த தொலைக்காட்சி.

சோனி டென் போட்டி

சோனி டென் போட்டி

பழைய கிரிக்கெட் போட்டிகளை மக்கள் அதிக அளவில் பார்க்கிறார்கள் என்பதை கண்ட சோனி டென், அதிரடியாக ஏப்ரல் 1 முதல் WWE பிளாக்பஸ்டர் என்ற நிகழ்ச்சியை தொடங்கி பழைய சிறந்த ரெஸ்லிங் போட்டிகளை ஒளிபரப்பத் துவங்கியது. சுமார் 30 ஆண்டு கால போட்டிகளின் பெரிய தொகுப்பை வைத்துள்ள WWE, நேரடியாக கிரிக்கெட்டுடன் மோதியது என்றும் சொல்லலாம்.

சிறந்த ரெஸ்லிங் போட்டிகள்

சிறந்த ரெஸ்லிங் போட்டிகள்

கிரிக்கெட்டுக்கு இணையாக போட்டி போட்டுக் கொண்டு பழைய போட்டிகளை தேடி எடுத்து ஒளிபரப்பினர். அண்டர்டேக்கர், ட்ரிப்பிள் எச், ராக் உள்ளிட்ட முன்னணி வீரர்களின் போட்டிகள் ஒளிபரப்பானது. பழைய ரெஸ்லிங் போட்டிகளுக்கு மவுசு அதிகம் தான் என்பது இந்த நிகழ்ச்சி மூலம் தெரிந்தது. அதுவும் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர்வு

பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர்வு

இந்தியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை கண்காணித்து வரும் "பார்க்" நிறுவனம் இந்த ஆண்டின் 12வது வாரத்தை விட, 13வது வாரத்தில் விளையாட்டு சேனல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 21 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பார்வை நிமிடங்களில் வளர்ச்சி

பார்வை நிமிடங்களில் வளர்ச்சி

பார்வை நிமிடங்களில் 87 சதவீதத்துடன் முதல் இடத்தை பிடித்துள்ளது 2011 உலகக்கோப்பையில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி. அதே தொடரில் நடந்த இந்தியா - இலங்கை போட்டி 52 சதவீதமும், WWE பிளாக்பஸ்டர் 23 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளன.

முதல் ஐந்து இடங்கள்

முதல் ஐந்து இடங்கள்

இந்த ஆண்டின் 13வது வாரத்தில் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் சேனல்களில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பர்ஸ்ட் முதல் இடத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி இரண்டாம் இடத்திலும் உள்ளன. சோனி டென் 1 மூன்றாம் இடத்தில் உள்ளது. சோனி டென் 3 மூன்றாம் இடத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

Story first published: Friday, April 10, 2020, 17:43 [IST]
Other articles published on Apr 10, 2020
English summary
WWE and Cricket started broadcasting old matches to gain viewership during lockdown period in India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X