For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

WWE JOHN CENA வின் 20 வது ஆண்டு கொண்டாட்டம்.. வரலாற்றை உருவாக்கிய சாதனை நாயகன்

டெக்சாஸ்: 90 களில் பிறந்த குழந்தைகள் வாழ்க்கையில் நீங்காத இடம் பிடித்த பொழுதுப் போக்கு விளையாட்டு தொடர் என்றால் அது WWE தான்.

அப்படிப்பட்ட WWE வின் முதல் நிலை வீரர், ஹூரோ என அனைத்தும் இந்த ஜான் சீனா தான். ஜான் சீனா இந்நிறுவனத்துக்கு வந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனை WWE நிறுவனம் பெரும் விமரிசையாக கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில் தோன்றிய ஜான் சீனாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்படி போடு..!! கிரிக்கெட் போட்டிக்கு இடையே ஒரு குத்துச்சண்டை.. இங்கி, ரசிகர்களால் அதிர்ந்த மைதானம் அப்படி போடு..!! கிரிக்கெட் போட்டிக்கு இடையே ஒரு குத்துச்சண்டை.. இங்கி, ரசிகர்களால் அதிர்ந்த மைதானம்

சிறுவயது கனவு

சிறுவயது கனவு

1977ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெஸ்ட் நியூபரி பகுதியில் பிறந்தவர் தான் ஜான் பெலிக்ஸ் ஆண்டனி சீனா. சிறு வயதில் ஹல்க் ஹோகனின் ரசிகரான ஜான் சீனா, அவரை போலவே மல்யுத்த போட்டியில் பெரும் சாதனை படைக்க வேண்டும் என்ற கனவில் இருந்தவர். WWE போட்டியில் வழங்கப்படும் சாம்பியன் பெல்ட்களை பேப்பர்களில் அணிந்து கனவு கண்டவர் சீனா.

மல்யுத்த ஒப்பந்தம்

மல்யுத்த ஒப்பந்தம்

வெறும் கனவை மட்டும் காணாமல், அதற்காக கடுமையாக உழைத்தார். முதலில் பாடி பில்டர் ஆக பயிற்சி எடுத்து கொண்ட ஜான் சீனா, 1999ஆம் ஆண்டு மல்யுத்தத்தில் கவனம் செலுத்தினார். பிறகு 2001ஆம் ஆண்ட ஜான் சீனாவின் திறமையை கண்டறிந்த வின்ஸ் மிக்மேன், அவரை WWE மல்யுத்த நிறுவனத்தில் சேர்த்தார்.

முதல் போட்டி

முதல் போட்டி

WWE தொடரில் 2002ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி, முதல் முறையாக மல்யுத்த போட்டியில் ஜான் சீனா களமிறங்கினார். அதில், பிரபல மல்யுத்த வீரர் குர்ட் ஆங்கிள், தன்னிடம் சண்டையிட யாருக்கும் தகுதி இல்லையா என்று சவால் விட, வீரர்கள் அறையிலிருந்து ஜான் சீனா வந்து, குர்ட் ஆங்கிளுக்கு செம டஃப் கொடுப்பார். அப்படி தான் அவரது கதைக் கரு எழுதப்பட்டு இருந்தது.

மல்யுத்த ஹீரோ

மல்யுத்த ஹீரோ

குர்ட் ஆங்கிள் அந்தப் போட்டியில் வென்றாலும், ரசிகர்களின் மரியாதையை ஜான் சீனா பெற்றார். அப்போது போட்டி முடிந்ததும், பிரபல மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர், ஜான் சீனாவுக்கு கைக் கொடுத்து பெயர் என்ன என்று கேட்டு உற்சாகப்படுத்தினார். அன்று முதல் இன்று வரை WWE மல்யுத்த போட்டியின் ஹீரோவாக ஜான் சீனா மாறினார்.

சாதனைகள்

சாதனைகள்

Never give up என்ற வாக்கியம், Champ is here, Its my time now, You cant see me போன்ற வாக்கியங்கள் ஜான் சீனாவின் பஞ்ச் டைலாக்குகள். The Rock என்று அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் சினிமாவுக்கு சென்ற உடன், அவரது இடத்தை ஜான் சீனா பிடித்தார். தனது வித்தியாசமான சண்டை மூவ்களால் உலகம் முழுவதும் தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். 16 முறை WWE சாம்பியன் பட்டம், 5 Wrestlemania களின் முக்கிய போட்டி, 5 முறை அமெரிக்க சாம்பியன் பட்டம், 4 முறை WWE Tag team சாம்பியன், 2 முறை ராயல் ரம்பிள் பட்டம் என பல சாதனைகளை படைத்த ஜான் சீனா தற்போது ஹாலிவுட் படங்களில் ஒரு ரவுண்ட் வருகிறார்.

Story first published: Tuesday, June 28, 2022, 18:22 [IST]
Other articles published on Jun 28, 2022
English summary
WWE Celebrates 20th year anniversary of John cena debut WWE JOHN CENA வின் 20 வது ஆண்டு கொண்டாட்டம்.. வரலாற்றை உருவாக்கிய சாதனை நாயகன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X