For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பீதியில் நடுங்கும் WWE ஊழியர்கள்.. உள்ளே என்ன நடக்கிறது? ஷாக் தகவல்!

ஒர்லாண்டோ : WWE ரெஸ்லிங் நிறுவனம் பெரும் பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு கொண்ட நிறுவனம் ஆகும்.

Recommended Video

கொரோனா பீதியில் அஞ்சி நடுங்கும் WWE ஊழியர்கள்

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும் தன் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.

அதனால், ஊழியர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், உள்ளே சமூக இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

புகார்

புகார்

இதுபற்றி WWE ஊழியர் ஒருவர் கவுன்டி நிர்வாகத்துக்கு புகார் அளித்துள்ளார். அதன் மூலம் இது குறித்த அதிர்ச்சி செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும், இதை WWE மறுத்துள்ளது. அதே சமயம், WWE நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டு வரும் இடத்துக்கு அருகே இருப்பவர்கள் என்ன நடக்கிறது என கூறி உள்ளனர்.

WWE நிலை

WWE நிலை

WWE ரெஸ்லிங் நிகழ்ச்சிகள் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதில் இருந்து ரசிகர்கள் இல்லாத அரங்கில் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பானது. இந்த நிலையில், திடீரென ப்ளோரிடா மாகாணத்தில் WWE-ஐ அத்தியாவசிய தேவையில் சேர்த்து பெரும் அதிர்ச்சி அளித்தது மாகாண அரசு.

அனுமதி

அனுமதி

அந்த உத்தரவை அடுத்து முன் கூட்டியே போட்டிகளை பதிவு செய்து ஒளிபரப்பி வந்த WWE நேரலையில் போட்டிகளை பதிவு செய்து ஒளிபரப்ப அனுமதி கிடைத்தது. அதனால், ஊழியர்கள் அதிக அளவில் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பயமாக உள்ளது

பயமாக உள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்களில் மக்கள் வீட்டுக்குள் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. ஆனால், தங்களால் வீட்டுக்கே செல்ல முடியவில்லை. மேலும், WWE-இல் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பதால் பயமாக உள்ளது என ஒரு ஊழியர் புகார் அளித்துள்ளார்.

வேலை போய்விடும்

வேலை போய்விடும்

அதே சமயம், இந்த புகாரை வெளிப்படையாக கூறினால் தன் வேலை போய்விடும் என தான் அச்சத்தில் இருப்பதாகவும் அவர் ஆரஞ்ச் கவுன்டி அரசு அமைப்பிடம் புகார் தெரிவித்துள்ளார். அரசு இந்த ஒளிப்பதிவை நிறுத்தி, ஊழியர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க உதவி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புகாரை WWE மறுத்துள்ளது

புகாரை WWE மறுத்துள்ளது

ஆனால், இந்த புகாரை WWE மறுத்துள்ளது. ஊழியர்கள் பொதுவெளியில் கூறாமல் இது போன்ற புகார்களை மனித வள அதிகாரியிடம் கூறலாம் என்பதை அறிந்தவர்கள். இது போன்ற சுற்றுப் புறத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று கூறி உள்ளது.

சமூக இடைவெளி இல்லை

சமூக இடைவெளி இல்லை

ஆனால், தற்போது ஒளிப்பதிவு நடந்து வரும் இடத்திற்கு அருகில் உள்ள சிலர் கூறுகையில், WWE ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அருகருகே இருப்பதை கண்டதாக கூறி உள்ளனர். இது பற்றி கடந்த சில நாட்களாகவே புகார் கூறப்பட்டு வருகிறது.

அரசியல் செல்வாக்கு

அரசியல் செல்வாக்கு

அந்த புகார்களுக்கு நடுவே தான் WWE-க்கு அத்தியாவசிய சேவை என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. WWE உரிமையாளர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நண்பர்கள் வரிசையில் இருப்பதும், கேபினட் பதவி ஒன்றில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 24, 2020, 11:36 [IST]
Other articles published on Apr 24, 2020
English summary
A WWE employee complains about forced to work amid coronavirus pandemic. He also claims there is no social distancing followed.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X