For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் பாதிப்பு.. 80களில் ரெஸ்லிங் உலகை கதிகலங்க வைத்த WWE ஜாம்பவான் கமாலா மரணம்!

நியூயார்க் : WWE ஜாம்பவானான "கமாலா" என்றும் ஜேம்ஸ் ஹாரிஸ் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.

அவருக்கு வயது 70. ஏற்கனவே, பல்வேறு உடல்நலக் குறைபாடுகளை கொண்டிருந்த அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டது.

80களில் பிரபலமான ரெஸ்லிங் வீரராக வலம் வந்தார் கமாலா. WWEக்கு வரும் முன் WCW, WCCW உள்ளிட்ட ரெஸ்லிங் நிறுவனங்களில் அவர் பங்கேற்றார்.

 விசுவாசம் தான் எல்லாமே... ஆர்சிபிய விட்டு எப்பவும் விலகமாட்டேன்... விராட் கோலி நெகிழ்ச்சி விசுவாசம் தான் எல்லாமே... ஆர்சிபிய விட்டு எப்பவும் விலகமாட்டேன்... விராட் கோலி நெகிழ்ச்சி

கமாலா

கமாலா

கமாலா உகாண்டா நாட்டை சேர்ந்தவர். சுமார் 170 கிலோ எடை கொண்ட அவர், 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர். பருத்த உடலுடன் காட்சி அளித்த அவர் முகத்தில் ஆப்பிரிக்க இனக் குழுக்களின் வழக்கத்தை பறை சாற்றும் வகையில் முகத்தில் சாயம் பூசிக் கொண்டு போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

ஓய்வு

ஓய்வு

அப்போதைய பெரிய ரெஸ்லிங் நட்சத்திரங்களான ஹல்க் ஹோகன், அண்டர்டேக்கர், ஆண்ட்ரே தி ஜெயன்ட் உள்ளிட்டவர்களுடன் மோதி உள்ளார். அவரது தோற்றம் காரணமாக அப்போதைய ரசிகர்கள் கதிகலங்கினர். 90களில் அவர் ஓய்வு பெற்றாலும் WWEஇல் 2006 வரை அவ்வப்போது தோன்றி வந்தார்.

கால்களை இழந்தார்

கால்களை இழந்தார்

அவருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருந்தது. 2011இல் அவரது இடது காலில் முட்டிக்கு கீழ் உள்ள பாகத்தை இழந்தார். பின் 2017இல் உடல்நிலை மோசமடைந்து அறுவை சிகிச்சையில் இரண்டு கால்களும் நீக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

உடலளவில் பல்வேறு பிரச்சனைகளை கொண்டு இருந்த அவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார். அவருக்கு WWE மற்றும் ரெஸ்லிங் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Monday, August 10, 2020, 16:08 [IST]
Other articles published on Aug 10, 2020
English summary
WWE Kamala Harris passes away at the age of 70. He lost his life fighting coronavirus. WWE fans remembers his best moments.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X