For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போட்டியை முடக்க முயற்சி.. தம்மாத்தூண்டு ரெஸ்லிங் நிறுவனத்தை மூட துடிக்கும் WWE!

By Aravinthan R

நியூயார்க்: ரெஸ்லிங் நிறுவனங்களில் உச்சத்தில் இருக்கும் WWE, ஒரு சிறிய ரெஸ்லிங் நிறுவனத்தை மூடுவதற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ.6.80 கோடி) கொடுக்க முன்வந்ததாக ரெஸ்லிங் செய்தியாளரான பிராட் ஷெபர்ட் தெரிவித்துள்ளார்.

டாமி ட்ரீமர் என்ற ரெஸ்லிங் வீரர் நடத்தி வரும் ரெஸ்லிங் நிகழ்ச்சிகளை நடத்தும் ஒரு சிறிய நிறுவனம் "ஹவுஸ் ஆப் ஹார்ட்கோர்" (HOH). இந்த நிறுவனத்தில் குறைவான அளவில் இருந்தாலும், சில முக்கிய ரெஸ்லிங் வீரர்கள் ஒப்பந்தத்தில் இருக்கிறார்கள்.

டாமி ட்ரீமர் ரெஸ்லிங் வீரராக WWE உட்பட, பல நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறார். எதிர்காலத்தில் இந்த நிறுவனம், பில்லியனர்களாக வலம் வரும் தனது நிறுவனத்தை சிறிய அளவில் பாதிக்கலாம் என கணித்த WWE நிறுவனம், டாமி ட்ரீமரிடம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

1 மில்லியன் டாலர் பேரம்

1 மில்லியன் டாலர் பேரம்

இது பற்றி பிராட் ஷெபர்ட், "டாமி ட்ரீமர், தன் ஹவுஸ் ஆப் ஹார்ட்கோர் நிறுவனத்தை மூட, பால்பார்க்-கில் 1 மில்லியன் டாலர் வரை (WWE-யால்) பேரம் பேசப்பட்டது. இது மிகப்பெரிய செய்தி. ஏனெனில், நாம் இப்போது WWE தன் போட்டியாளர்களை வெளியேற்ற நினைக்கும் போக்கை கண்டுகொண்டு இருக்கிறோம்" என்றார்.

படியாத பேரம்

படியாத பேரம்

இந்த பேரத்தை டாமி ட்ரீமர் ஏற்கவில்லை என்றும், தனது நிறுவனத்தின் நிகழ்ச்சிகளை விருப்பத்தின் பேரில் நடத்தி வருவதால், WWE-ஐ புறக்கணித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. WWE இது போல தன் போட்டியாளர்களை வளர விடாமல் செய்ய, முன்பு பல குறுக்கு வழிகளை கையாண்டுள்ளது.

WCW-ஐ வீழ்த்திய WWE

WCW-ஐ வீழ்த்திய WWE

90களில் WWEக்கு பெரிய போட்டியாக வந்து அவர்களை மிஞ்சி பார்வையாளர்களை பெற்ற நிறுவனம் WCW ஆகும். இரண்டு நிறுவனங்களும் ஒருவரை ஒருவர் வீழ்த்தும் போட்டியில், வீரர்களை இழுப்பதும், டிவி நிகழ்ச்சிகளில் புதுமை செய்வதும் என இருந்தன. WWE தன் வீரர்களை தக்க வைத்து, WCW-இன் செயல்பாடுகளை பல்வேறு வழிகளில் முடக்கியது. ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. இன்று WWE-இன் புகழ் பெற்ற வீரர்களில் பலர், WCW நிறுவனத்தில் தங்கள் வாழ்வை தொடங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

WWE-இன் குறுக்கு புத்தி

WWE-இன் குறுக்கு புத்தி

இதன் பின் TNA, ROH, NJPW போன்ற பல சிறிய நிறுவனங்கள் புதிய ரெஸ்ட்லிங் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை வளர்ப்பதும், அந்த வீரர்களில் திறமையானவர்களை WWE உள்ளே இழுப்பதும் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இடையில் தானே சொந்தமாக புதிய வீரர்களை வளர்க்க NXT என்ற சிறிய நிகழ்ச்சியை ஆரம்பித்தது WWE. சிறிது காலம் புதிய வீரர்களை அடையாளம் கண்டு வந்த இந்த இடத்திலும் தற்போது போட்டி நிறுவனங்களை சேர்ந்த வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். WWE-இன் ஒப்பந்தம் முடிந்த வீரர்கள் மற்ற சிறிய நிறுவனங்களில் சேர்வதும் வாடிக்கையான ஒன்று.

போட்டியை மொத்தமாக முடக்க திட்டமா?

போட்டியை மொத்தமாக முடக்க திட்டமா?

HOH போன்றே பிற சிறிய நிறுவனங்களையும், WWE முடக்க முடிவு செய்துள்ளதா? என்ற கேள்வி ப்ரோ ரெஸ்லிங் அரங்கில் எழுந்துள்ளது. பணம் பத்தும் செய்யும். பொறுத்து இருந்து பார்ப்போம்.

Story first published: Wednesday, August 1, 2018, 13:25 [IST]
Other articles published on Aug 1, 2018
English summary
WWE offered 1 million dollar to House of Hardcore wrestling promotion, to close their business.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X